![செ.Ezhilan Profile](https://pbs.twimg.com/profile_images/1883549293161656320/K_77W1xf_x96.jpg)
செ.Ezhilan
@EzhilanChezhiy2
Followers
53
Following
3K
Statuses
4K
A child is born with no state of mind, blind to the ways of mankind.
Joined November 2022
சுபம்
ஈவெரா முரண்பாடுகளின் மூட்டை! தான்தோன்றித்தனத்தின் உச்சம்! -------------------------------------- அன்பிற்கினிய அண்ணன் @sugunadiwakar அவர்களுக்கு! உங்களது பதிவுக்கு ( ) எனது மிகத் தாமதமானப் பதிலுரைக்குப் பொறுத்தருள்க! எனது முந்தைய பதிவில் ( ) நான் எழுப்பிய கேள்விகளுக்கு, “பெரியார் இயக்கங்கள் மற்றும் திமுக குறித்த கேள்விகளுக்கு அந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். நான் சொன்ன கருத்துக்குப் பொறுப்பேற்றுதான் நான் பதில் சொல்லமுடியும்” எனக் கூறியிருக்கிறீர்கள். பெரியாரிய இயக்கங்களையும், திமுகவையும் பொதுவெளியில் எவ்வித விமர்சனமின்றி முழுமையாக ஆதரித்துப் பேசுகிறவர் என்கிற அடிப்படையில் அக்கேள்விகளைத் தங்களிடம் முன்வைத்தேன். அதனைத் தவிர்த்திருக்கிறீர்கள். போகட்டும். தொடக்கத்திலேயே, “நாம் தமிழர் கட்சி முன்வைப்பது தமிழ்த்தேசியமே இல்லை” என்கிறீர்கள். “சீமான் முன்வைப்பது தமிழ்த்தேசியம் என்றால், அவர் இந்திய தேசியத்தை ஏற்கிறாரா, மறுக்கிறாரா' என்பதுதான் என் கேள்வி. ஒருவர் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டே 'நான் ஒரு தமிழ்த்தேசியவாதி' என்று சொன்னால் அவருக்குத் தேசியம், தேசிய இனம் குறித்து எந்தப் புரிதலும் கிடையாது” என்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியானது இந்தியத்தை ஒரு தேசியமாகக் கருதவில்லை; அதனை ஏற்கவும் இல்லை. எங்களின் தேசியம் தமிழ்த்தேசியம்தான். இந்தியா எனும் ஒன்றியத்துக்குள் இருக்கிறோமே ஒழிய, ‘இந்தியர்’ எனும் கற்பிதத்தை ஒருநாளும் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை அதேசமயம், தமிழ்நாடு எனும் தமிழர்களின் வரலாற்றுத்தாய்நிலம் இன்றைக்கு இந்திய ஒன்றியத்துக்குள்தான் இருக்கிறது. தமிழ்நாடு என்பது ஒரு மாநிலமாக இருந்தாலும், அது வரலாற்றுவழிப்பட்ட தமிழர்களின் தாயகம்; தேசம். அந்தத் தேசத்தில் வாழும் தமிழ்த்தேசிய இன மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை, நாகரீகம், மரபு, வாழ்வியல், பொருளியல், எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றையும் காப்பதற்கும், மீட்பதற்குமான அரசியலை தமிழ்த்தேசிய அரசியல் என முன்வைக்கிறோம். மற்றபடி, நாங்கள் தனித்தமிழ் நாடு கோரவுமில்லை. கோருவதற்கான புறச்சூழலும் ‘இன்றைக்கு’ இல்லை. இதே நிலத்தில் எங்களுக்கு முன்பாக தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்த ஐயா பழ.நெடுமாறன், அண்ணன் திருமாவளவன் போன்றோர் தனிநாடு கோரவில்லை. தனிநாடு வரையறையில்லாத தமிழ்த்தேசியத்தைத்தான் அவர்கள் முன்வைத்தார்கள்; வைக்கிறார்கள். ஆனால், சமரசம் செய்தார்கள்; சறுக்கினார்கள். நாங்கள் சமரசமின்றி, சறுக்கல் இன்றி, தமிழ்த்தேசியப் பயணத்தைத் தொடர்கிறோம். திராவிட நாடு கேட்ட பெரியார் ஈ.வெ.ரா. கடைசிக்காலத்தில் தனித்தமிழ்நாடு கோரினார்; அறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, ம.பொ.சி. முன்வைத்த மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைக் கையிலெடுத்தார். இருந்தபோதிலும், திராவிட நாட்டுக்கானத் தேவையும், காரணங்களும் அப்படியேதான் இருக்கின்றன என்றார். இன்றைக்கு இருக்கிற எந்தப் பெரியாரியவாதியாவது அவரது வழியில் தனித்தமிழ்நாடு கேட்கிறீர்களா நீங்கள் உட்பட? அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் மு.க.ஸ்டாலின் ‘திராவிட நாடு’ எனும் சொல்லையாவது உச்சரிக்க முன்வருவாரா? வாய்ப்பே இல்லை! அதற்கான புறச்சூழலோ, சாத்தியக்கூறுகளோ, சட்டப்பூர்வ வாய்ப்புகளோ எதுவுமில்லை. கனடா நாட்டின் நோவா ஸ்கோசியா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாநிலங்கள் பிரிந்துசெல்வதற்கு அந்நாட்டின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய வரலாறு இருக்கிறது. அதற்காக அச்சட்டமன்றங்கள் கலைக்கப்படவுமில்லை; அக்கட்சிகளின் தலைவர்கள் சிறைப்படுத்தப்படவுமில்லை. ஆனால், இங்கு அப்படிப்பட்ட சனநாயக வாய்ப்பில்லை. அது எப்போதோ பறிக்கப்பட்டுவிட்டது. பிரிந்துபோகும் தன்னுரிமையைக் கோரினால், அது பிரிவினைவாதம்; தீவிரவாதம்; அதனை சனநாயகப்பூர்வமாகக் கோரிகூட, இங்கு எந்த அமைப்பும் செயல்பட முடியாது. அத்தகைய கோருதலுக்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளைக்கூட 18 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்த நீங்கள் ஆதரிக்கும் திமுக பெற்றுத்தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 1963ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிவினைவாத தடுப்புச் சட்ட மசோதாவை எதிர்த்து அப்போது பாராளுமன்றத்தில் முழங்கினார் அறிஞர் அண்ணா. அதற்குப் பிறகான காலக்கட்டத்தில் ஒன்றிய அமைச்சரவையில் பல ஆண்டுகள் அங்கம் வகித்த அண்ணாவின் ஆருயிர் தம்பி கருணாநிதி தலைமையிலான திமுக, அச்சட்டத்தைத் திரும்பப் பெற ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பதுதானே வரலாறு! அதனைச் செய்யாதுவிட்டு, தனி நாடு கோருதலைத் தேசவிரோதக் குற்றமென இருத்தச் செய்துவிட்ட ஒரு கட்சியை ஆதரித்துக் கொண்டே, “தனிநாடு கோருவீர்களா?” என்று எங்களை நோக்கிக் கேட்பதில் என்ன தார்மீகம் இருக்கிறது? பெரியார் வழிமொழிந்த ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் முழக்கத்தைக்கூட, ‘விடுதலை’ ஏட்டிலிருந்து நீக்கிய கி.வீரமணி மீது வராத சீற்றம், நாம் தமிழர் கட்சி மீது வருவதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரியார் முன்வைத்த தனித்தமிழ்நாடு முழக்கத்தை வைக்காத வீரமணி பெரியாரிய தொண்டரா? எனக் கேட்க ஒருநாளும் உங்கள் நா முன்வராது என்பதையும் நன்றாக அறிவேன். போகிற போக்கில், தேசியம், தேசிய இனம் குறித்து எந்தப் புரிதலும் கிடையாது என எங்களைக் குற்றப்படுத்துகிறீர்கள். அதுசரி! நீங்கள் தமிழ்த்தேசியத்தின் தலைவரென நிறுவத் துடிக்கும் பெரியார் ஈவெரா அவர்களுக்கு மொழியியல் குறித்தான அடிப்படைப் புரிதலாவது இருந்ததா? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை யாவும் ஒரே மொழிதான்; அவை வட்டார வழக்கால் மாறுபடுகிறது எனும் அளவில்தான் பெரியார் ஈவெராவுக்கு மொழி குறித்தான புரிதல் (!) இருந்தது என்பது நினைவிருக்கிறதா? மொழி பற்றிய புரிதலே இந்த அளவில் இருக்க தேசம், தேசியம் இனம் பற்றிய பெரியார் ஈவெராவின் நிலைப்பாடு என்னவென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆம்! அவருக்குத் தேசிய இனம், தேசம் குறித்தான எந்தப் புரிதலும், அக்கறையும் இருந்ததில்லை என்பதையும் உங்களுக்குப் பணிவோடு நினைவூட்டுகிறேன். ‘தேசியம் என்பதே அயோக்கியர்களின் புகலிடம்’ எனும் எமர்சனின் கூற்றை வழிமொழிந்த பெரியார் ஈவெரா எப்படி தமிழ்த்தேசியத்தைப் பேசியவராவார்? மொழி அபிமானமும் இல்லை; தேசாபிமானமும் இல்லையென முழங்கிய பெரியார் ஈவெரா பேசியது எப்படி தமிழ்த்தேசியமாகும்? திராவிட நாடு, தனித்தமிழ்நாடு என அவர் கேட்டதெல்லாம் வெறும் நாட்டுப் பிரிவினைகள்தானே ஒழிய, தமிழ்த்தேசியமில்லை. இன்னும் சொல்லப் போனால், ‘திராவிடர்’ என ஒரு இனம் இருப்பதாக பெரியார் ஈவெராவும், உங்களைப் போன்ற பெரியாரியவாதிகளும் புளங்காகிதம் அடைகிறீர்களே, எந்த மொழியியல் வரையறையின்படி, எந்த இனவியல் கோட்பாட்டின்படி அதனை வரையறுத்தீர்கள்? 1913ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலின் வரையறுத்த தேசிய இனக் கோட்பாட்டின்படி, உங்கள் திராவிடர் என்பது ஒரு இனமா? ராபர்ட் கால்டுவெல்லின் வரலாற்றுப்பிழையாலும், அறியாமையாலும் விளைந்த, ‘திராவிடர்’ எனும் கற்பிதத்தை ஒரு இனமாகக் கட்டமைத்து, தமிழர் எனும் தேசிய இனத்தை மறைப்பது எல்லாம் ஜோசப் ஸ்டாலினின் கோட்பாட்டுக்கு உகந்ததுதானா? ஒரு இடுகுறிப்பெய��ை ஒரு இனமாகச் சித்தரித்து, ‘தமிழர்’ எனும் தேசிய இன அடையாளத்தை மறைத்து அரசியல் செய்திட்டதை ஆதரிக்கும் நீங்கள் எந்த தார்மீகத்தின் அடிப்படையில் தேசிய இனக் கோட்பாட்டை முன்வைத்துக் கேள்வி எழுப்புகிறீர்கள்? //நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் 'தமிழ்த்தேசியம்' குறித்து கேள்வி கேட்டால் பதிலுக்கு பெரியார், தி.மு.கவைக் குற்றம் சாட்டி நான்கு கேள்விகள் கேட்பது அல்லது கேள்வி கேட்பவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைத் 'தெலுங்கர்' என்று முத்திரை குத்துவது - இதுமட்டும்தான் 'நாம் தமிழர்' கட்சியின் ஒரே விவாத அணுகுமுறை.// நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தமிழ்த்தேசியம் குறித்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறோம். கூடவே, அக்கேள்வியை முன்வைப்பவரது தார்மீகத்தைக் கேள்வியெழுப்புகிறோம். அதில் பெரியார் ஈவெரா, திமுக குறித்தான கேள்விகளும் உள்ளடங்கி இருக்கிறது. அதிலென்ன பிழை? அப்புறம், ‘தெலுங்கர்’ என உங்களுக்கு யார் முத்திரைக் குத்தியது? சமூக வலைத்தளங்களில் வரும் பின்னூட்டங்களை எல்லாம் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகக் கொள்வீர்கள் என்றால், அதே தர்க்கத்தை நீங்கள் ஆதரிக்கும் திமுகவுக்கும் பொருத்தலாமா? என்ன வாதமிது? // நாம் தமிழர் கட்சி சொல்வதைப்போல் திராவிடமும் திராவிடக் கட்சிகளும் தமிழர் அடையாளத்தை மறைத்துவிட்டன, ஈழப்படுகொலைகளுக்குத் துணைநின்றன என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொள்வோம். ஆனால் இங்கே தேசக்கட்டமைப்பு என்பது இந்திய தேசியம்தானே, உங்கள் வாதப்படி 'ஈழ இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது இந்திய தேசிய அரசு' தானே, திராவிடக்கட்சிகள் என்பது இந்த இந்தியக் கட்டமைப்பில், அரசியல் சட்டம், டெல்லி அதிகாரம், ஆளுநர், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அழுத்தத்தின்கீழ், வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்ட மாநிலக்கட்சிகள்தானே?// ஈழ இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது இந்திய அரசுதானே? எனக் கேட்டால், ஆம்! இந்திய அரசுதான். அந்த இந்திய அரசாக அன்றைக்கு இருந்தது யார்? காங்கிரசு – திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே! ‘வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’ என அண்ணா முன்வைத்த முழக்கத்தை மாற்றி, ‘வடக்கு கொடுக்கிறது! தெற்கு வாங்கிக் கொள்கிறது’ என கருணாநிதி முழங்கிய காலக்கட்டம் (2004 -2009) அது. ‘தென்னகம்தானே இந்தியாவையே இயக்கிக் கொண்டிருக்கிறது’ எனப் பெருமிதக் கதையாடல்கள் பேசப்பட்ட காலக்கட்டம் அது. அன்றைக்கு சிங்களர்கள் இன அழிப்பை நடத்தப் பக்கபலமாக நின்றது காங்கிரசு ஆட்சி! அந்த ஆட்சியே திமுகவின் தயவில்தான் ஒன்றியத்தில் இருந்தது. திமுக ஆதரவைத் திரும்பப் பெற்றால், இன்னொரு கட்சி ஆதரவளித்து காங்கிரசின் ஆட்சியைக் காப்பாற்றி விடும் எனும் அனுமானம் ஒருபுறம் இருக்கட்டும். தமிழர்களின் ஒருமித்த எண்ணவோட்டமாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது காங்கிரசுக்கான திமுகவின் ஆதரவைத் திரும்பப் பெறுவது ஒன்றுதான். அதனை ஏன் கடைசிவரை திமுக செய்யவில்லை? ஈழத்தமிழர்களுக்கெனக் கூறி, 1983ஆம் ஆண்டு அன்பழகனோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கருணாநிதி எதற்காக காங்கிரசுக்குக் கொடுத்த ஆதரவை 2009ஆம் ஆண்டு திரும்பப் பெறவில்லை? அன்றைக்கு சிங்கள அரசுக்கு ஆயுதமும், பணமும், பன்னாட்டளவில் அணிசேர்க்கையும் செய்து கொடுத்து, போரை நடத்தியது காங்கிரசு அரசுதானே! அந்த அரசில் பங்கேற்ற துரோகத்தைச் செய்தது திமுகதானே! ஈழப்படுகொலையை நிறுத்தக்கோரி 29.01.2009 அன்று கொளத்தூர் முத்துக்குமார் தொடங்கி, 18க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அவர்கள் மரணத்தை எல்லாம் கடன்தொல்லை, காதல் தோல்வி, குடும்பத் தகராறு எனப் போலியான காரணங்களை உருவாக்கி, அந்த ஈகங்களைக் கொச்சைப்படுத்தியது யார்? கருணாநிதிதானே! முத்துக்குமார் மரணத்திற்குப் பிறகு, ஏற்பட்ட இளைஞர், மாணவர் எழுச்சியை ஒடுக்கி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு, விடுதியைக்கூட இழுத்துப் பூட்டியது யார்? கருணாநிதிதானே! “சிங்களர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதவகையில் பேச வேண்டும்” எனக் கூறி அண்ணன் சீமான், ஐயா மணியரசன், பெரியாரியவாதி கொளத்தூர் மணி, பெரியாரியவாதி கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோரைக் கொடுஞ்சட்டத்தைக் கொண்டு சிறைப்படுத்தியது யார்? கருணாநிதிதானே! நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையைக் கட்டவிழ்த்துவிட்டு வழக்கறிஞர்களை அடித்து உதைத்து, ரத்தச்சகதியாக்கியது யார்? கருணாநிதிதானே! ‘ஈழம்’ எனும் சொல்லைக்கூட உச்சரிக்கவிடாது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது யார்? கருணாநிதிதானே! பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும் அப்படுபாதகச் செயல்பாடுகளும், துரோக வரலாறும்! அன்றைக்கு சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோனது காங்கிரசு அரசு. தமிழ்நாட்டில் எவ்வித எழுச்சியும் ஏற்படாவண்ணம் தடுத்து ஒடுக்கியது திமுக அரசு. இந்தியா எனும் கட்டமைப்பால் தமிழர்களுக்கு விளைந்த பாதகங்கள் எண்ணற்றவை என்பதை முழுதாக ஏற்கிறேன். அதேசமயம், அந்தக் கட்டமைப்பின் மீதேறி ஆளுகை செய்து தமிழர்களை அழித்தொழிக்கத் துணைபோன காங்கிரசு குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்? தேசம், தேசிய இனம் பற்றியெல்லாம் பேசுகிற நீங்கள் காங்கிரசு கட்சி எந்தத் தேசிய இனத்துக்கு உண்மையாய் நின்றது? எந்தத் தேசிய இனத்தின் உரிமைகளையும், நல்வாழ்வையும் விரும்பியது? தேசம், தேசிய இனம் பற்றிய பரந்த பார்வைகொண்ட நீங்கள் தேசிய இனங்களுக்கு எதிரான காங்கிரசு கட்சியை எந்த அடிப்படையில் ஏற்கிறீர்கள்? அப்புறம், ஈழம் குறித்துப் பேசுகிற நீங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? எதிர்க்கிறீர்கள்தானே! தமிழ்த்தேசிய இனத்தின் தேச விடுதலைக்காக நாடு கட்டப் போராடும் விடுதலைப்புலிகளை ஏற்காத நீங்கள், எந்த அடிப்படையில் தேசிய இனங்களை நசுக்கிற காங்கிரசு கட்சியை ஆதரிக்கிறீர்கள்? // நா.த.க தன் தலைவர்களாக முன்வைக்கிற பசும்பொன் முத்துராமலிங்கனார், காமராசர், பாரதியார், ம.பொ.சி, கக்கன் என அனைவரும் இந்திய தேசியவாதிகள். வசைபாடுவதோ நீங்களே சொல்வதன்படி 'கடைசிவரை தனித்தமிழ்நாடு கேட்ட 'ஐயா' பெரியார்'. அப்படியானால் நீங்கள் யார், உங்கள் தேசியம் எத்தன்மை வாய்ந்தது?// பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், பெருந்தலைவர் காமராசர், ம.பொ.சி., கக்கன், ம.பொ.சி. ஆகியோர் அக்காலக்கட்டத்தில் இந்தியத்தை ஆதரித்தவர்கள்கள்தான்; மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களைக் கொண்டாடுவது இவர்களது பங்களிப்புகளையும், ஈகங்களையும் சார்ந்துதானே ஒழிய, அவர்கள் இந்தியத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக அல்ல; இத்தோடு, அவர்கள் இந்தியப்பற்று என்பது அன்றைக்கு ஆதிக்கம் செய்த வெள்ளையர்களுக்கு எதிரானதாகத்தான் இருந்தது. இத்தோடு, இவர்கள் எவரையும் திராவிடத்தின் இறுதி நம்பிக்கையென நம்பி நீங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிற திமுக நிராகரிக்கவில்லை என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அப்புறம், பெரியார் ஈவெரா தனித்தமிழ்நாடு கேட்டார் என்பதற்காக நாங்கள் அவரை விமர்சிக்கவில்லை; தமிழ்மொழியைத் தூற்றினார் என்பதற்காகத்தான் விமர்சிக்கிறோம். கூடுதலாக, பெரியார் ஈவெரா தனித்தமிழ்நாடு கேட்டதில் சமரசம் செய்திருக்கிறார் என பாவலலேறு பெருஞ்சித்திரனார் விமர்சித்திருக்கிறார் என்பதையும் இச்சமயத்தில் குறிப்பிட விரும்புகிறேன். // நான் அறிந்தவரை 'தமிழ் பேசும் சாத��யைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆனால் போதும்' என்பதுதான் 'நாம் தமிழர் கட்சி'யின் வினோத தமிழ்த்தேசியம்.// உங்கள் அறிதலும், புரிதலும் அபத்தம்; அரைவேக்காட்டுத்தனம்! தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் எனும் பாவேந்தர் பாரதிதாசனின் கூற்றையே நாங்களும் வழிமொழிகிறோம். அறம்சார்ந்த தமிழர் ஆட்சி அமையப்பெற வேண்டுமென்கிறோம். இதில் பிறப்பால் தமிழர்களான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும்கூட வர மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் அறம்சார்ந்த ஆட்சியைத் தரவில்லை. அதனால், அவர்கள் ஆட்சியிலும் இம்முழக்கத்தை வைத்திருக்கிறோம். // எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுவிடுவோம். உங்கள் வரையறையின்படி 'தமிழரான' காமராசர் காலத்தில்தானே நாம் எல்லைப்பகுதிகளை இழந்தோம், 'தமிழரான' பக்தவச்சலம் ஆட்சியில் 'தமிழரான' கக்கன் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காவல்துறைதானே இந்தி எதிர்ப்புப் போராளிகளைச் சுட்டுக்கொன்றது என்றால் 'சீமான் போன்ற ஒருவர் முதலமைச்சர் ஆனால் எல்லாம் சரியாகும்' என்பதுதான் 'நாம் தமிழர் கட்சி'யின் வாதம். உலகத்திலேயே ஒரு தனிநபர் பதவியில் அமர்வதைத் தேசியம் என்று சொன்ன ஒரே இயக்கம் 'நாம் தமிழர் கட்சி'தான்.// பெருந்தலைவர் காமராசர் இந்தியராக இருந்ததால், எல்லைப்பகுதிகளை இழந்தோம் என நாங்களும் விமர்சனத்தை வைத்திருக்கிறோமே! காமராசர், கக்கனை விமர்சனத்தோடுதான் ஏற்றிருக்கிறோம். கண்மூடித்தனமாக ஒருபோதும் ஏற்கவில்லை. காமராசர் கொடுத்த நல்லாட்சியை போற்றுகிறோம். அதேசமயம், அவரது இந்திய மயக்கத்தை விமர்சிக்கிறோம். ம.பொ.சி.யின் எல்லை மீட்புப்போராட்டத்தைப் போற்றுகிறோம். அதேசமயம், மொழி குறித்தான அவரது சமரசங்களை விமர்சிக்கிறோம். கக்கனின் நேர்மையான பொதுவாழ்வைப் போற்றுகிறோம். அதேசமயம், பக்தவச்சலம் அமைச்சரவையில் அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது மொழிப்போரில் ஏவப்பட்ட துப்பாக்கிச்சூடுகளைக் கடுமையாக விமர்சிக்கிறோம். இவ்வாறு முன்னோர்களின் பங்களிப்புகளைப் போற்றுகிறோம். தடுமாற்றங்களை விமர்சிக்கிறோம். அதிலிருந்து இந்தத் தலைமுறைப்பிள்ளைகள் பாடம் கற்கிறோம். இத்தோடு, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும், பக்தவச்சலமும் தமிழர்களாகப் பிறந்தார்களே ஒழிய, தமிழர்களின் அறம்சார்ந்த ஆட்சியைத்தரவில்லை என்பதுதான் எங்களது விமர்சனமும்கூட. ஒரு தனிநபர் பதவியில் அமர்வதை தேசியம் என்று ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு நீங்கள் எடுத்துக் கொண்டால், அது உங்கள் புரிதலில் இருக்கும் கோளாறு. தமிழர்களின் அறம்சார்ந்த ஆட்சி என்பது தமிழ்த்தேசியத்தின் ஒரு கூறு; தமிழ்த்தேசியத்துக்கான முழக்கம். அதனையே தமிழ்த்தேசியமென வரையறுக்கவில்லை. // 'தமிழ் பேசக்கூடிய சாதியைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும்'என்றாவது நாம் தமிழர் கட்சி கோருகிறதா என்றால் அதுவும் இல்லை.// தமிழர் என்றுதான் கூறியிருக்கிறோம். தமிழ் பேசக்கூடிய சாதியென்று நாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. நீங்கள் சமூக வலைத்தளப் பின்னூட்டங்களைக் கேள்விகளாகக் கொண்டு, அதற்கு எங்களுக்குப் பதிலளிக்காதீர்கள். அதுசரி! தமிழ்நாட்டை தமிழரே ஆள அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமா? எதற்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்? மக்கள் மன்றத்தில் ஆதரவைப் பெற்று, அதிகாரத்தில் அமர்கிற வழி போதாதா? பார்ப்பனர் அல்லாதார் அமைச்சரவை அமைக்க அத்தகைய சூழலை உருவாக்கினீர்களா? இல்லை! அரசியல் சட்டத்தைத் திருத்தினீர்களா? மதவாதத்தை வேரூன்ற விடமாட்டோமென முழங்குகிறோமே, அம்முழக்கத்திற��கு மக்கள் மன்றத்தில் ஆதரவுகோருகிறோமா? இல்லை! சட்டத்தைத் திருத்த முனைகிறோமா? // பிறகு என்ன 'தமிழ்த்தேசியம்' ? விஜயாவது கருவாட்டுச் சாம்பார் வைத்தார்; சீமானிடம் இருப்பதோ கருவாடும் இல்லாத சாம்பாரும் இல்லாத காலி பானை. விஜய்யாவது நடுச்சாலையில் இருக்கிறார். சீமான் நிற்பதோ எந்த ஊருக்கும் பயணம் போகாத முட்டுச்சந்து.// விஜய் வைப்பது கருவாட்டுச்சாம்பார்தான். நாங்கள் வைப்பது தித்திப்பைத் தரும் சர்க்கரைப்பொங்கல். அது காலிப்பானையாகத் தெரிகிறதென்றால், திராவிடமெனும் கானல் நீரைக் கண்டு தாகம் தீர்க்க முனைகிற உங்களது தோற்றப்பிழையின் வெளிப்பாடுதான் இதுவுமென எண்ணி அனுதாபம் கொள்கிறேன். அப்புறம், நாங்கள் முட்டுச்சந்தில் நிற்கவுமில்லை. திராவிட நாடு எனும் இல்லாத நாட்டின் வரைபடம் தேடி அலையவுமில்லை. தடைகளை முட்டிமோதி, எங்களுக்கானப் பாதையை நாங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். // தி.மு.க மாநில சுயாட்சி என்று சொல்வதைக் கொஞ்சம் தமிழ்ப்படுத்தி மாநிலத் தன்னாட்சி என்கிறது நாம் தமிழர் கட்சி. 8 சதவீதம் வாக்குகள் வாங்கி அங்கீகரிக்கப்பட்டது 'மாநிலக்கட்சி'யாக, கேட்பது 'மாநிலத் தன்னாட்சி', எதிர்ப்பது திராவிடத்தை மட்டும்தான் இந்திய தேசியத்தை அல்ல// மாநிலத் தன்னாட்சி என்பது திமுகவின் முழக்கம் அல்ல; முன்பே கூறியதுபோல, அது திமுக எடுத்துக் கொண்ட முழக்கம்; அது தமிழ்த்தேசியவாதியான ம.பொ.சி.யின் முழக்கம். நாங்கள் திராவிடத்தை மட்டும் எதிர்க்கிறோம்; இந்தியத்தேசியத்தை அல்ல என்கிறீர்கள். இந்தியா எனும் கட்டமைப்புக்குள் இருக்கிறோம். நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் திராவிடமும் இருக்கிறது. உங்கள் பெரியார் ஈவெராவும் இருந்தார். நாங்கள் இந்தியத்தைத் தூக்கிப் பிடிக்கவில்லை. இந்தியா எனும் கட்டமைப்புக்குள் நின்று, எங்கள் தேசிய இனத்திற்கான அரசியலைப் பேசுகிறோம். நாம் இந்தியரும் அல்ல; இந்துவும் அல்ல என்கிறோம். அவ்வாறு பேசக்கூடிய ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். நீங்கள் ஆதரிக்கக்கூடிய திமுக எந்த இடத்தில் இந்தியத்தை எதிர்க்கிறது? அவர்கள் இந்துக்கள் எனப் பேசத் தொடங்கிவிட்டார்கள்; இந்தியர் என்றும் முழக்கமிடுகிறார்கள். நியாயமாக, இதனைப் போலித்திராவிடமென நீங்கள் சாடத்தானே வேண்டும்? இது திராவிடமே இல்லையென வாதிடத்தானே வேண்டும்? ஏன் அப்போது மட்டும் நீங்கள் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்? திராவிட இயக்கத்தின் மூலவர்களான பெரியார் ஈவெராவும், அறிஞர் அண்ணாவுமே, ‘இந்து’ எனும் அடையாளப்படுத்தலை ஏற்கவில்லை; “தமிழன் தன்னை, ‘இந்து’ எனக் கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.” என 1939லிலேயே முழங்கினார் பெரியார் ஈவெரா. 1940ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாநாட்டில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்கூட, ‘இந்து’ எனப் பதிவுசெய்யக்கூடாது எனக் கோரினார். பெரியார் ஈவெராவிடமிருந்து மாறுபட்டுப் பிரிந்து, திமுக எனும் தனியியக்கத்தைக் கட்டியெழுப்பிய அண்ணா, கடவுள் மறுப்பைக் கைவிட்டாரே ஒழிய, ‘இந்து’ என்பதை ஏற்கவில்லை; “கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்; ஏனென்றால், இவை முறையே, வைணவர்களையும், சைவர்களையும் இந்துக்களாக மடைமாற்றம் செய்கின்றன. தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்லர்; தமிழர்களுக்கு எனத் தனி வழியுண்டு” என்றார். தமிழர்களுக்கு எனத் தனி வழியுண்டு எனக் குறிப்பிட்ட அண்ணா, அந்த வழியைக் கடைசிவரைக் காட்ட முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இத்தோடு, “மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை, ‘இந்து’ எனக் கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? ‘இந்து’ என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தப் பிறகு,யாருக்குத்தான், ‘இந்து’ எனக்கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா?மதிதுலங்கும் விஷயங்களைவிட்டு,மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழிபிறந்தப் பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண்தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்தப் பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்தப் பிறகு, தம்மை இழிவுசெய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மதத்தில் போய் சேர இசைவாரா?வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றார். இனி ஈனமாய் நடத்தும் இந்து மதத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!” எனவும் தனது ‘ஆரிய மாயை’ நூலில் எழுதினார் அண்ணா. அரசியலமைப்புச்சாசனப்படி, பெரியார் ஈவெராவும், அண்ணாவும்கூட இந்துக்கள்தான்; ஆனால், ஒருபோதும் அதனை அவர்கள் ஏற்கவில்லை; எதிர்த்துப் பரப்புரை செய்தார்கள். அந்த பெரியார் ஈவெரா, அறிஞர் அண்ணா ஆகியோரின் அடியொற்றி இயக்கம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் திமுக, வெட்கமின்றித் தங்களை இந்துக்களென சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது. கடவுள் நம்பிக்கை கொண்டு மூகாம்பிகையை வழிபட்ட எம்.ஜி.ஆர்.கூட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ‘இந்து’ எனக்குறிப்பிடாது, ‘திராவிட மதம்’ எனப் பதிவுசெய்திருக்கிறார். ஆனால், கொள்கைக்கூடாரமெனக் கூறிக்கொள்ளும் திமுகவோ, ‘இந்துக்கள் இல்லை’ என அறிவிப்பு செய்யவோ, பரப்புரை செய்யவோ வக்கற்று அஞ்சி நடுங்குகிறது. ‘இந்து’ என்று கூறியதோடு மட்டும் திமுக நிற்கவில்லை; ‘ராமரை’ சமூக நீதிக்காவலரெனக் கூறி, அவர்தான் அண்ணாவுக்கும், பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முன்னோடி என திருவாய் மலர்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். உபயம், திமுகவின் அமைச்சர் ரகுபதி. ராமரும் சமூக நீதிக்காவலர்; ஈ.வெ.ராமசாமியும் சமூக நீதிக்காவலரென்றால், திமுக வைப்பது கருவாட்டுப் பாயசம் இல்லையா? அதுவும் ஊசிப்போனது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? வாழ்ந்து மறைந்த பெரியார் ஈவெராவுக்கு, கற்பனையில் புனையப்பட்ட இதிகாசப்பாத்திரம் ராமர்தான் முன்னோடி என்றால், இது பெரியாரியமா? பெரிய ஆரியமா? அதேபோல, தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்களை நோக்கி, ‘விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான் மனுதர்மம்’ எனக் கூறி, மனு தர்மத்தைக் கடைபிடிக்கக் கோரினார் திமுகவின் இன்னொரு அமைச்சர் சேகர்பாபு. மனு தர்மத்தைக் கடைபிடிக்கச் சொல்கிற இடத்துக்குப் போய் நிற்கிறது திமுக. இது திராவிடமா? தீரா விடமா? உங்கள் அறச்சீற்றம் இந்த இடத்தில் எல்லாம் முனைமழுங்கிப் போனது ஏனோ? // தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றிப் பாடுவதற்கு உள்ள தைரியம் (இந்திய) தேசிய கீதத்தைக் கேள்வி கேட்பதில் இல்லை.// தமிழ்த்தாய் வாழ்த்தை எங்கள் மேடைகளில் பாட விரும்புகிறோம். அதனால், மாற்றிப் பாடுகிறோம். இந்தியப் பாடலைத்தான் எங்கள் மேடைகளில் நாங்கள் பாடுவதே இல்லையே! ��ிறகெங்கு, மாற்ற? நிறைவாக... மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்றார் மாமேதை மார்க்ஸ். நிலைப்பாடுகள் மாறலாம். கோட்பாடுகள்கூட மாறலாம். ஆனால், அந்த மாற்றங்கள் தன்னலம் சாராது, தன்முனைப்பு சாராது பொதுநோக்கம் சார்ந்து இருக்க வேண்டும். அம்மாற்றம் வாசிப்பின் வாயிலாகவோ, வரலாற்று மீளாய்வின் வாயிலாகவோ, களப்பணிகள் தந்த அனுபவத்தொகுப்பின் வாயிலாகவோ நிகழலாம். அதுவே மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய மாற்றமாக இருக்கும். பெரியார் ஈவெரா முன்வைத்த நிலைப்பாடு மாற்றமெல்லாம் முழுக்க முழுக்கத் தன்னலம் சார்ந்தவையே! தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையில்தான் அவர் பெரும்பான்மையான நிலைப்பாடுகளை எடுத்தார். தமிழரென்றால் பார்ப்பனர்கள் வந்துவிடுவார்கள் என்பார்; பிறகு, பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்பார். திமுகவைக் கண்ணீர்த்துளிகள் கட்சியென்று கூறி, அதனைத் தடைசெய்யக் கோருவார். பிறகு, அதே திமுகவை இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்ய வேண்டுமென்பார். காமராசரை விஷப்பல்லெனக் கூறி, சாடுவார். அப்புறம், அதே காமராசர் முதல்வரானதும் ஆதரித்து, வேலைசெய்வார். கூலியுயர்வு கேட்கக்கூடாது; இலாபத்தில் பங்கு கேட்க வேண்டுமென கம்யூனிசப் பாடமெடுப்பார்; பிறகு, கிடைக்கிற கூலியை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறி, கம்யூனிஸ்டுகள் கலகத்தை ஏற்படுத்துகிறார்கள் எனப் பழிசுமத்துவார். பார்ப்பனர்களைத் தீயிட்டுக் கொளுத்தினாலென்ன? என மாநாட்டு மேடையில் முழங்குவார். பிறகு, ‘பார்ப்பனத் தோழர்களுக்கு’ என விடுதலையில் தலையங்கம் வடிப்பார். நாட்டுப்பற்று இல்லை என்பார்; பிறகு, நாட்டின் முன்னேற்றத்துக்கு எனக் கூறி, கட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தடைகோருவார். மனிதாபிமானமே எனக்கு இருக்கும் ஒற்றை அபிமானம் என்பார்; பிறகு, மொழிப்போரில் போராடும் மாணவர்களை சுட்டுக் கொல்லாது ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்பார். இந்தித்திணிப்பை ஏற்க முடியாது என்பார்; பிறகு, அவன் காசில் அவனது இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் லாபம்தானே எனக் கேட்பார். இனப்பற்றே வேண்டாம் என்பார். அப்புறம், நாமெல்லாம் திராவிடர் இனம் என்பார். தேசப்பற்று கூடாது என்பார். அப்புறம், திராவிட நாட்டை அடைவோம் என மேடையில் முழக்கமிடுவார். அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்த வேண்டுமென்பார். பிறகு, கொளுத்தியவர்களைத் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்பார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்பார்; பிறகு, தேர்தலில் பார்ப்பன வேட்பாளர்களுக்கே வாக்குக் கேட்பார். இசுலாமே அருமருந்து என்பார். பிறகு, இசுலாமியர்களுக்கு இங்கென்ன வேலை? பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் செல்லுங்கள் என்பார். நான் சொல்லிவிட்டென்பதற்காகக் கேட்க வேண்டாம்; உன் சுயஅறிவைக் கேள் என்பார். அப்புறம், எனக்கு யோசனை சொல்கிற அறிவாளிகள் வேண்டாம். நான் சொன்னதைக் கேட்கிற முட்டாள்கள் போதும் என்பார். சுயசாதிக்குத் துரோகம் செய் என்பார்; பிறகு, நாயக்கர்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் என குடியரசில் தலையங்கம் வடிப்பார். கோபாலகிருஷ்ண நாயுடுவோடு ஒரே மேடையில் ஏறுவார். இந்தியமே எதிரி என்பார்; பிறகு, இந்தியக் கட்சிக்கு வாக்குக் கேட்பார்; அக்கட்சியிலேயே சேரவும் பரிந்துரை செய்வார். கள்ளுக்கு எதிராகத் தென்னை மரங்களை வெட்டி சாய்ப்பார். பிறகு, மதுவிலக்கே கூடாது; மதுவும் ஒரு உரிமை என்பார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்பார். பிறகு, கட்டற்ற உறவுமுறையையும், பலதார மணத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பார். பெண்ணியம் என்பார்; அப்புறம், பெண்கள் உடுத்துகிற ஆடையையும், அணிகிற நகைகளையும் அரசே தீர்மானிக்க வேண்டும் என்பார். பத்தினித்தனம் இல்லையென்பார். வேசி, தாசி எனும் சொற்களைக் கொண்டு வசைபாடுவார். எத்தனை எத்தனை தன்முரண்கள்? எவ்வளவு மோசமான தன்முனைப்பு? ஆகவேதான், சொல்கிறோம் பெரியார் ஈவெரா முரண்பாடுகளின் மூட்டை! தான்தோன்றித்தனத்தின் உச்சம்!
0
0
0
@AgathiyanSivam1 மூத்திர சட்டிக்குள்ள விழுந்ததை கழுவாம கூட மூஞ்சியில மாட்டுன இந்த கண்ணாடியா அங்கில்
1
0
0
@_kabilans தமிழ்க்கடவுள்கள் சிவன், முருகன் படம் வைக்காம வேற யாரு படம் வைக்கனும்? கட்டு கருணா போட்டோ மாட்டுவோமா?
0
0
4
@AgathiyanSivam1 தொந்தி வடுகனுக்கு வணக்கம் வச்ச சங்கிய விமர்சிச்சு தான அந்த பதிவே இருக்கு! கள்ளச்சங்கிக்கு மூளை பிறழ்வு ஆகிவிட்டது பாவம்🤡
1
0
1
@A_n_b_e_S_i_vam ஒரு புரிதலுக்காக கேட்கிறேன், "Children school" ல குழந்தைகள் படிப்பாங்களா இல்ல குழந்தைகளுக்கு சொல்லி தரும் ஆசிரியர்கள் படிப்பாங்களா? children wing ன்னா children தான இருப்பாங்க Children welfare wing ன்னா தான குழந்தைகளுக்கான wing? உபிக்கள் தற்குரிகள் என்றாலும் இந்த கேள்வி சரிதான
0
0
1
@Vetrive77793833 @Udhaystalin @AnshithaPrincey @dmk_youthwing @DMKITwing @DrSuriya_ @iparanthamen @idumbaikarthi @GprMadurai @V_vimal_Mdu @rajubhai_DMK கட்டு கருணா எப்ப கேரளாவுக்கு முதலமைச்சரா இருந்தாரு
0
0
0
@magizh_ Political pokes னு ஒரு சேனலா? உபிக்களால் உபிக்களுக்கே exclusive ஆக நடத்தும் சேனல் போல
0
0
0