elavasam
@elavasam
Followers
11K
Following
365
Statuses
106K
Software Industry, Chartered and Cost Accountant, Blogger - https://t.co/QL4RjCap5z
Austin, TX
Joined July 2008
முயற்சிப்பது இல்லை, முயல்வது. நாம சொல்ல வேண்டியதை நாம சொல்வோம்.
அகத்தியப் புரட்டு பண்பாட்டுப் படையெடுப்பின் உச்சம்? தமிழ்மொழித் தமிழாய்வு நிறுவனம் அகத்தியர் குறித்த புராண கட்டுக்கதைகளைத் தூக்கிப்பிடிக்க முயற்சிப்பது ஏன்? தமிழ் இலக்கியங்களுக்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் – வாரீர்! ---------------------------------------------- அகத்தியர் குறித்த புராணச் செய்திகளை, ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த ஒரு வாரமாக இந்திய அளவில் உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, அகத்தியரைப் பற்றிய கருத்தரங்குகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், சொற்பொழிவுகளை நடத்துமாறும் அதற்கு ஒன்றிய அரசு நிறுவனங்களின் வழி��ாக செலவுக்குரிய தொகையை அளிக்கின்றோம் என்றும் கூறி, பொம்மை (டம்மி) துணைவேந்தர்களைத் துணைகொண்டு, அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அகஸ்தியர் பற்றி போட்டியாம் – கருத்தரங்கமாம்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி பின்வருமாறு அறிவிப்பு ஒன்றினை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார். “பதினெண் கீழ் சித்தர்களில் சிறந்தவரான அகஸ்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூலில் இயல், இசை, கூத்து எனும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். சித்த மருத்துவம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவரது சிறப்புகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ‘அருந்தமிழ் கண்ட அகஸ்தியர்’ என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவர்களுக்கு’அகஸ்தியர் காட்டும் அறிவியல்’ என்ற தலைப்பிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது” (தினமலர் 18.01.2025). செம்மொழி நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? செம்மொழி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதற்குத் தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம், வேதம், புராணம், இதிகாசம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் குறித்து ஆராய்ச்சி செய்யவும் அவற்றைப் பரப்பவும் தொடங்கியிருப்பது – தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்! கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதைதானே இது! தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கி யங்களைப் பரப்ப வேண்டிய செம்மொழி நிறுவனம் அதன் கொள்கைகளுக்கு எதிராக நடப்பதைத் தமிழர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். செம்மொழி நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் செயலை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறும் செம்மொழி நிறுவனத்தையும் அதன் நோக்கத்தையும் பாதுகாக்குமாறு நாம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழியைச் ‘‘செம்மொழி’’ என்று அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, இந்திய அரசின் சார்பில் 2004 சூன் மாதம் 6 ஆம் நாள் தமிழ் மொழியைச் ‘‘செம்மொழி’’ என்று அதிகாரப் பூர்வமாக இந்திய அரசு அறிவித்தது. இதனால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டு, தமிழின் பழைமையான இலக்கண நூல்களான தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் உள்ளிட 41 நூல்களை ஆராய்ச்சி செய்யவும், அந்நூல்களின் கருத்துகள் மக்களிடம் பரவவும் வழிவகைகள் காணப்பட்டன. தமிழ் ஆய்வுக்குத் தொடர்பே இல்லாத பார்ப்பன அம்மையார் செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவரா? இந்த நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியாகப் பேராசிரியர் க. இராமசாமி அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் நியமிக்கப்பட்டு, மிகச் சிறப்பான திட்டமி��லுடன், செம் மொழி நிறுவனப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவரின் பணிக்காலத்தில் செம்மொழி நிறுவனத்திற்கு உரிய நிலம் தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்டு, கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன. (1/3
0
0
1
Now @AmericanAir has become smart. They are not giving out any schedule. Just a generic not available message. Why do you even have a chat option?
Hey @AmericanAir what really are your chat support hours? at 8:15am, the availability was from 10:15am but at 10:15am, it is closed for the next three days...
3
0
1
Congratulations @rpraggnachess. This generation of Indian chess players is a true tribute to the King @vishy64theking
0
0
0