![Asiriyar K.Veeramani Profile](https://pbs.twimg.com/profile_images/974525734915006466/6Pg2caD7_x96.jpg)
Asiriyar K.Veeramani
@AsiriyarKV
Followers
106K
Following
149
Statuses
4K
Official account of DK President Asiriyar K.Veeramani
Chennai, India
Joined June 2017
அகத்தியர் பற்றிய ஆராய்ச்சியைச் சமஸ்கிருத வல்லுநர்கள் செய்யட்டுமே!. அதனை விடுத்து, தமிழ்நாட்டில் தமிழுக்குக் கொடுத்த நிதியை மூடத்தன, புராணங்களுக்கு புதுமெருகேற்றப் பயன்படுத்தலாமா? ஏன் வடமொழிக்கு வால்பிடிக்க வேண்டும்? முன்பே ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சமஸ்கிருதத்துக்கு அதிக தொகையும், தமிழுக்கு குறைந்த தொகையும் வழங்கி வருகின்றது. வருகின்ற தொகையையும் வடமொழிக்கு மடைமாற்றிச் செலவிடுவது எந்த வகையில் நியாயம் ஆகும்? தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு எனவே, தமிழ்நாட்டு அரசு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் அறிவுக்குப் பொருந்தாத அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை, மூடத்தனத்தைப் பரப்பும் வகையில் உள்நோக்கத்துடன் நடத்துவதைத் தடைசெய்ய வேண்டும். அரசின் கொள்கைக்கு முரணாகச் செயல்படும் அதிகாரிகள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட செம்மொழி இலக்கியங்களைப் பரப்பத் தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டுதற்குரிய பணிகளில் செம்மொழி நிறுவனமும் தமிழ்நாட்டு அரசும் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதே தன்மானம் உள்ளோரின் அவசர அவசிய கடமையாகும். கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் சென்னை 9.2.2025 (3/3)
0
4
8
🔴 ஒன்றுபட்டு சகோதரர்களாக வாழும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதா? திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் மத மாச்சரியத்திற்கு அப்பாற்பட்டு பன்னூறு ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழுகின்றனர். அதைக் குலைப்போர் யாராக இருந்தாலும், தமிழ்நாடு அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும்போது, அதற்கு முட்டுக்கட்டை போட நீதிமன்றங்களைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் பொதுநலம், பொது அமைதிக்கு உகந்ததாகாது! இந்து – இஸ்லாமிய – சமண வழிபாட்டுத் தலங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றனவே! இறைச்சிக் கடைகளும், உணவு விடுதிகளும், சாப்பிடும் மக்களும் இல்லையா? உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு முசாபர் நகரில் திட்டமிட்ட வகையில் ஒரு மதக்கலவரத்தை உருவாக்கி, சிறுபான்மை – பெரும்பான்மை என்று பிளவுபடுத்தி (Polarisation) அரசியல் ஆதாயம் பெற்றதுண்டு. இது சங் பரிவார்களுக்கே உரித்தான அணுகுமுறையே! திட்டமிட்டே இப்படி வலிய வம்புகளை உருவாக்கி, மதக்கலவர பூமியாக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதனை அரசியல் தூண்டியலாக்கி மீன் பிடிக்க முனையும் காவிக் கூட்டத்தின் கனவுகளும், ஆசைகளும் ஒருபோதும் திராவிட ஆட்சியில் நிறைவேறாது! எந்த மலைகளுக்கும் தமிழ்நாட்டில் ஆபத்து இல்லை. அண்ணாமலைகளின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே அவர்கள் அதைக் காப்பாற்றவே இப்படி ஒரு புது வேஷம் கட்டி ஆடப் புறப்பட்டுள்ளார்கள் போலும்! 🔴 அனைவரும் ஒன்றுபட்டு அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டைக் காப்போம்! பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நாசகார கும்பலின் திட்டமிட்ட கலவரத் தூண்டுதலை ‘திராவிட மாடல்‘ அரசு அடக்கி, அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்காமலிருக்க அனைவரும் கட்சி பேதமின்றி, மக்கள் நலங்காக்கும் மனித சங்கிலியாக நின்று காட்டுவோம்! வென்று காட்டுவோம்!! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!! வாரீர்! வாரீர்!! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். சென்னை 6.2.2025
0
2
6
🔴 ‘‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசிக்க உதவியது அரசமைப்புச் சட்டமே தவிர மனுஸ்மிருதியல்ல!’’ 🔴 மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஓங்கி அடித்தார்! 🔴 தங்களின் மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளனர், எச்சரிக்கை! நேற்று (3.2.2025) நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட்பற்றி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.மல்லிகார்ஜூன கார்கே அவர்கள், ‘‘நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்குப் பட்ஜெட் வாசிக்க உதவியது – இந்திய அரசமைப்புச் சட்டமே தவிர, மனுஸ்மிருதி அல்ல; சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களும் அரசமைப்புச் சட்டம் காரணமாகவே அவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்’’ என்று பளிச்சென்று ஓங்கி அடித்துப் பேசியுள்ளதோடு, கையில் மனுஸ்மிருதி புத்தகத்தை வைத்துக்கொண்டே அவையில் இவ்வாறு பேசியுள்ளார். நிதியமைச்சர் அம்மையார் அவர்கள் ஒரு பெண்மணி – அவர் எந்த ஜாதியினராக இருந்தாலும், அதுபற்றிப் பொருட்படுத்தாமல், அவரது, அரசியல் வாழ்வில் எட்டாவது முறையாக பட்ஜெட் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தில் அந்த வாய்ப்பைப் பெற்றார். அதற்கு மூல காரணம் மனுஸ்மிருதியும், பகவத் கீதையும் கூறிய பெண்ணிய கண்டனக் கருத்துகளை ஒதுக்கிப் புறந்தள்ளி, ஜாதி, மத, பாலின வேறுபாடுகளைத் தாண்டி, சமத்துவமும், சம வாய்ப்பும் தந்துள்ளது அரசமைப்புச் சட்டமே! நமது புரட்சியாளர் அம்பேத்கரின் அரும்பெரும் முயற்சியால் – பற்பல நேரங்களில் ‘‘வாடகைக் குதிரையாக’’ (டாக்டர் அம்பேத்கர் மொழி இது) அவர் பயன்படுத்தப்பட்டதையும் தாண்டி, பெண்ணுரிமை – சம உரிமை வாய்ப்பால்தான் இந்தப் பெருமை, இந்த அம்மையாருக்குக் கிடைத்திருக்கிறது. 🔴 பெண்களைப்பற்றி மனுதர்ம சாஸ்திரமும், கீதையும் கூறுவது என்ன? மனுஸ்மிருதியால் பெண்களுக்கு எக்காலத்திலும், எந்த நிலையிலும் – சுதந்திரம், சமத்துவம் அறவே கிடையாது என்பதுதானே அதன் ஸநாதனத் தத்துவம்? அதுபோலவே, பகவத் கீதையால் பெண்கள், சூத்திரர்களும் எவ்வாறெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை இந்த அறிக்கையில் குறிப்பிடுவது அவ்வளவு நனிநாகரிகமாகாது. பல சுலோகங்கள் அருவருப்பு நிறைந்து, பெண்களைக் கொச்சைப்படுத்தும் நிலைதான்! உயர்ஜாதிப் பெண்களுக்கும்கூட வேதத்தைப் படிக்க, கேட்க உரிமையே கிடையாது என்பதுதானே வர்ணதர்மத்தின் கோட்பாடு! அதைத்தான் மிக அழகாகச் சுட்டிக்காட்டி, யதார்த்தத்தை அப்படியே தோலுரித்துக் காட்டியுள்ளார் காங��கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான திரு.மல்லிகார்ஜூன கார்கே அவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ஆர்கனைசர்’’ வார ஏட்டில், 1949 நவம்பர் 26 ஆம் தேதி (அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நாள்) ஆர்.எஸ்.எஸ். தலைவரும், கொள்கை கர்த்தாவுமான எம்.எஸ்.கோல்வால்கர், இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்தபோது, மிகவும் வன்மத்துடன் எழுதினார் அவ்வேட்டின் தலையங்கத்தில் ‘‘பழைமையான நமது பாரதத்தில் நிலவிய தனித்துவமான அரசமைப்பு மேம்பாடுகள் குறித்து நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவே இல்லை. ‘மனு’வின் சட்டங்கள், ஸ்பார்ட தேசத்து லிடுர்கஸ், பெர்ஷியா தேசத்து சோலோன் ஆகியோருக்கு முன்பே எழுதப்பட்டவைவே. மனுஸ்மிருதியில் இதுநாள்வரை ஒளிரும் அந்தச் சட்டங்கள் உலகின் மரியாதையை – தன்னெழுச்சியான தழுவுதலை உறுதிப்படுகின்ற நமது அரசமைப்புச் சட்ட வல்லுநர்களைப் பொறுத்தவரை அது ஒன்றுமில்லை.’’ அதுமட்டுமா? இந்தியாவுக்கு மனுதர்மமே அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று சொன்னவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வழக்குரைஞர்கள் நடத்திய பல மாநாடுகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதியே, இந்திய அரசமைப்புச் சட்டமாக ஆக்கப்படவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார்கள். அதைத்தான் வெளிப்படையாகவே நடைமுறையில் – ஒரு பக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டே, மறுபுறம் இம்மாதிரி தீர்மானம் இயற்றும் இரட்டை வேடம் பூண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய உண்மை. முந்தைய அவர்களது மறைமுகத் திட்டம் (Hidden Agenda) இப்போது வெளிப்படையாக பேசு பொருளாகி (Open Agenda), சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்துள்ளனர் – எச்சரிக்கை! அப்படி வந்தால், பெண்களின் சுதந்திரம், சமத்துவம் என்னவாகும்? 🔴 முகமூடியைக் கிழித்தார் காங். தேசிய தலைவர் கார்கே! இதை எண்ணிப் பார்க்கவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சிறப்பாக அரசமைப்புச் சட்டத்தில் அமர சந்தர்ப்பம் பார்க்கும் மனுஸ்மிருதிவாதிகளின் முகமூடியைக் கழற்றி அடையாளம் காட்டியுள்ளார். அவருக்கு நமது பெரியார் மண்ணின் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்! #MallikarjunKharge
1
51
107
🟥 இன்றைய பட்ஜெட்பற்றி நமது கருத்து! பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான நிதி உதவிகள் – மழை வெள்ள நிவாரணம் என்ற வகையிலோ அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கான எந்த அறிவிப்போ, நிதி ஒதுக்கீடு ஏதும் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றமாகும்! பட்டை நாமம் தீட்டப்பட்டுள்ளது. 🔴 பீகார் சட்டமன்ற தேர்தலை நோக்கி! மாறாக, இவ்வாண்டு பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டோ அல்லது கூட்டணியைத் தாங்கிப் பிடிப்பதற்காகவோ, பீகார் ஆதரவு ஆட்டங்காணாமல் இருப்பதற்காகவோ அறிவிக்கப்பட்ட திட்டம் – புதிய திட்டம் – பழைய திட்டங்களை மேம்படுத்துதல் என்று பீகாரை முன்னிறுத்தியே முழுக்க முழுக்க பட்ஜெட்டை – மைனாரிட்டி அரசான ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாற்காலி ஆட்டங்காணாமல் பாதுகாக்க ஓர் அரசியல் பாதுகாப்பிற்கான கருவியாகவே பட்ஜெட்டைப் பயன்படுத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாய் விளங்குகிறது! சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு இது போல் தனி நிதிச் சலுகை அளித்ததுபோல், இவ்வாண்டு பீகாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது! ‘‘சூட்சமம் புரிகிறதா தம்பி?’’ என்று முன்பு அறிஞர் அண்ணா எழுதிய தலைப்பைத்தான் வெகுவாக நினைவூட்டுவதாக இது உள்ளது! திருக்குறள் – வள்ளுவரைக்கூட இம்மாதிரி அரசியலுக்குத் துணையாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி தமிழ், தமிழ்நாட்டிற்கு வேறு ஆக்கப்பூர்வ உதவி ஏதும் இடம்பெறவில்லை. எல்லா மாநில மக்களும் இணைந்த கூட்டாட்சிதான் இந்திய ஒன்றிய ஆட்சி என்பதைப் புறக்கணிப்பது நியாயமா? 🔴 கூட்டுறவுக் கூட்டாட்சி என்பது வெறும் வாயுரைதான்! இடையே ‘‘கூட்டுறவு கூட்டாட்சி’’ (‘‘Cooperative federalism’’) என்ற ‘நாமாவளி’ பட்ஜெட் வெறும் வாயுரை மட்டும்தானே பயன்பட்டுள்ளது! தமிழ்நாட்டு மக்களின் வரி வருமானம் பெற்றும் இப்படி ஓரவஞ்சனை, பாராமுகம், அரசமைப்புச் சட்டப்படியும், அறவழிக் கண்ணோட்டத்திலும் நியாயம்தானா? தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து சிந்திப்பார்களாக! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். 1.2.2025 சென்னை
3
16
27
# காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்று (ஜன.30)! # தீண்டாமையை எதிர்த்தாலும், வருணாசிரமத்தில் நம்பிக்கை உடைய காந்தி! # இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்று காந்தியார் சொன்ன பிறகுதான் படுகொலை செய்யப்பட்டார்! # தமிழ்நாட்டில் மதக்கலவரம் அப்பொழுது ஏற்படாமல் தடுத்தவர் தந்தை பெரியார்! ------------------------------------------------- மதவெறியும், மூடநம்பிக்கையும் மனித குலத்தின் கொடிய விரோதிகள்; அவை தம் கோரப்பசிக்கு மனிதர்களின் உயிரையே விலை கேட்டு விழுங்கும்! இன்று ‘நாட்டுத் தந்தை’ என்று அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவர் அண்ணல் காந்தியார். அவரை ஹிந்து மதவெறி– ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே என்ற புனேவைச் சேர்ந்த – உயர்ஜாதி என்று அழைக்கப்படும் சித்பவன் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர் சுட்டுக் கொன்ற துயர நாள் இந்நாள் (ஜன.30, 1948). நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், காந்தியின் பரவும் செல்வாக்கும், அவரது பிரச்சாரமும் ஹிந்து மதத்தின் செல்வாக்குக்கு எதிராக அமையும் என்று கூறி, தான் இக்காரியத்தைச் செய்ததற்குத் தனக்கு ஊக்கச் சக்தியாக அமைந்தது ‘பகவத் கீதை’ என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ‘‘May It Please Your Honor’’ என்ற தலைப்பில், நீதிமன்றத்தில் அவரது நீண்ட வாக்குமூலம் நூலாகவே வெளிவந்துள்ளது. # காந்தியாரின் படுகொலைபற்றி, தந்தை பெரியார் டைரியில் பதிவு தந்தை பெரியார் அவர்கள், அவருடைய டைரியிலேயே காந்தியாரின் படுகொலைபற்றி பதிவு செய்த குறிப்புகளில், 1.வகுப்புரிமை 2. மதத்தை அரசியலில் கலக்கக் கூடாது என்பன போன்ற கருத்துகளை வெளியிட்ட காந்தியாரை ஒரே மாதத்தில் மதவெறி கொன்றது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்து மதத்தின் முக்கிய அம்சமான வருணாசிரம தர்மத்தை முழுமையாக ஆதரித்து வந்தார் காந்தியார் – தீண்டாமை ஒழிப்புப்பற்றி பிரச்சாரம் செய்தவர்தான்! (இது ஒரு சுய முரண்பாடு). # வருணாசிரமம் என்பதுதான் ஹிந்து மதத்தின் முக்கிய கூறுபாடு. தந்தை பெரியாரும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரும் காந்தியாரை கடுமையாக எதிர்த்ததற்கும், விமர்சித்ததற்கும் காரணம், காந்தியாரின் வருணாசிரமக் கொள்கைக்காகவே! இறுதிக் காலத்தில் காந்தியார் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கொடுமை, தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ்நாட்டுப் பார்ப்பன ஆதிக்க வன்கொடுமையைப் புள்ளி விவர ரீதியாக – ஓமாந்தூரார் ஆட்சிக் காலத்தில் அவர் உணர்ந்ததின் விளைவாகவே மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது! பார்ப்பனர் ஆதிக்கத்தைக் கண்டித்த காந்தியார்! அத்துடன் ஹிந்து மதவெறி சக்திகளும், அமைப்புகளும் மதச்சார்பற்�� நாட்டை, ஒரு சார்பு மதச் சார்பு நாடாக மாற்ற செய்த முயற்சிகள்பற்றி அறிந்த நிலையிலேதான் இறுதியாக அவர் பார்ப்பனர் ஆதிக்கத்திற்காக அவர்களைக் கண்டித்தார். # தமிழ்நாடு கலவர பூமியாகாமல் தடுத்தார் பெரியார் பிறகு அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில், தொடக்கத்தில் காந்தியைக் கொன்றவர்பற்றி மற்ற மதத்தவர்மீது பழிபோடப்பட்டு, மதக் கலவரங்கள் திருவண்ணாமலை, ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு போன்ற ஊர்களில் பரவிடும் நிலையில், தந்தை பெரியாரிடம், தமிழ்நாட்டு காங்கிரஸ் முதலமைச்சர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் வேண்டுகோள் விடுக்கக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமைதி காக்க மக்களுக்கு அறிவுரை, அறவுரை வழங்கி, தமிழ்நாடு கலவர பூமியாகாமல் தடுத்தார் பெரியார். மராத்தியத்தில் பல ஊர்களில் அக்கிரகாரங்கள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு எதிரான தாக்குதல்கள் – விரும்பத்தகாத நிலைகள் ஏற்பட்டன. (‘‘மொரார்ஜிதேசாய் சுயசரிதை’’ - ஆதாரம்). # அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ செயல்பட்டார்! தமிழ்நாட்டில், கோட்சேபற்றி செய்தி வெளியான பின்பும், தந்தை பெரியார் தனிப்பட்ட முறையில் பார்ப்பன சமூகத்தினருக்கு எதிராக எதிர்வினையில் இறங்கக்கூடாது என்று பல பொதுக்கூட்டங்களில் விளக்கிக் கூறி, அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ செயல்பட்டார்! அதுதான் இன்றும் ‘திராவிட மாடல்‘ ஆட்சியில் தொடர்ந்து வரும் சிறப்பு நிலை. # மண்ணாங்கட்டிகளைத் தவிர, மற்ற எல்லா மக்களுக்கும் புரியும்! ‘வடபுலத்தில் ஹிந்து சாயா, முஸ்லீம் சாயா’ என்று புகை வண்டி நிலையங்களில் கூவி விற்ற கொடுமை போல, இங்கு என்றும் ஏற்பட்டதே இல்லை; காரணம், ‘திராவிடம்’ என்ற சமத்துவத் தத்துவத்தின் அடிப்படையில், தந்தை பெரியாரின் மண்ணாக இன்றும் தமிழ்நாடு விளங்குகிறது என்பது சில மண்ணாங்கட்டிகளைத் தவிர, மற்ற எல்லா மக்களுக்கும் புரியும். நம் நாட்டில் மதவெறி மீண்டும் மத விழாக்கள் மூலமாக மறைமுகமாக விசிறி விடப்படுகின்றது. ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமே சிதறும், ‘‘ஹிந்து ராஜ்ஜியமாகவே’’ ஆக்கப்படும் என்பதை, தங்களிடம் ஆட்சி வசப்பட்டுள்ளது என்பதை வைத்து, பல முயற்சிகள் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. இல்லாவிட��டால், ‘‘இந்தியாவின் சுதந்திர நாள் எனக்கு உண்மையில் சுதந்திர நாளில்லை; இராமர் கோவிலை – பாபர் மசூதி இடித்த இடத்தில் கட்டி முடித்த நாள்தான் எனக்கு சுதந்திர நாள்’’ என்று மதவெறியை பச்சையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுகிறார். அதற்கு ‘‘தேச பக்த திலகங்கள்’’ ‘‘பாரத மாதா புத்திரர்கள்’’ எவரும் இன்றுவரை மறுப்பேதும் சொல்லவில்லையே! # மாண்டவர்களுக்கு நமது ஆழ்ந்து இரங்கல்! மவுனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே! அதனால்தான், கோவில்கள், பண்டிகைகள், ‘மேளாக்கள்’ என்பவை பக்திக்காக என்பது பாமர மக்களுக்கு மட்டும்; மதவெறி பரப்பி, அந்த போதையிலிருந்து மக்களை மீளாமல் வைத்திருக்கவே கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகள் – பல உயிர்கள் நெரிசலில் மாண்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மாண்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நமது ஆழ்ந்த இரங்கல்! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். சென்னை 30.1.2025
0
7
16
முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கென இட ஒதுக்கீடு கிடையாதா? சமூகநீதியின்மீது மரண அடி! ------------------------------------------------------ எம்.பி.பி.எஸ். தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென இடங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த சமூகநீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கும், மாநில உரிமைக்கும் மரண அடியாக அமையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாதாம்! இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாதிப்பாகும். தனது சொந்த செலவில், மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில அரசு செயல்பட்டால், அதில் அத்துமீறி நுழைந்து, அனைத்து மாநிலங்களுக்கும் ‘தானம்’ செய்யும் அதிகாரம் என்பது அரசமைப்புச் சட்டப்படி சரியானதா? ஏற்கெனவே மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசு, மாநில அளவிலான 50 விழுக்காட்டையும் பறிப்பது பகற்கொள்ளையாகும். இதனைத் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு அரசும் பணியாது; இதன்மீது சட்ட ரீதியான மேல்நடவடிக்கையை நீதிமன்றத்தின்மூலமும், மக்கள் மன்றத்தின்மூலமும் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஒன்றுபடுவோம், வென்றிடுவோம்! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். சென்னை 30.1.2025 #Social_Injustice
#MedicalAdmission
#TamilNadu
@CMOTamilnadu @mkstalin @Subramanian_ma
1
61
94
வேங்கை வயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது! மிக நுட்பமான – மக்களிடையே பகைமையை உண்டாக்கும் பிரச்சினையை அரசியலாக்கிக் குளிர்காயக் கூடாது! சி.பி.அய்.யிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வந்ததா? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம்! ------------------------------------------------------------ புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு 2022 டிசம்பரில் கலக்கப்பட்டதான கடைந்தெடுத்த இழிசெயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்து வதந்திகளைப் பரப்பிட வேண்டாம் என்றும், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது. வேங்கைவயல் சம்பவம்: வதந்திகளைப் பரப்பிட வேண்டாம்! தமிழ்நாடு அரசு வேண்டுகோள்! ‘‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய 239/2022-இல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள்எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன: சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிபராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவாநந்தம் என்பவரை அவமான��்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சி களின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு (i) முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.’’ 397 பேர்களிடம் விசாரணை இந்த நுட்பமான ‘எளிதில் தீப்பற்றும்’ பிரச்சினைமீது யாராக இருந்தாலும் தீரமாக சிந்தித்துப் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும். அரசு வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு அக்கறையுடன் அனைத்து வகைத் தொழில் நுட்பங்களையும், தடய அறிவியல்களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிய வருகிறது. 397 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 87 செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்து துப்புத் துலக்கப்பட்டுள்ளது. ஒரு காவல்துறை எதை எதை எல்லாம் அதிகபட்சம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் துல்லியமாக செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை எத்தகையது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்து செயல்படும் அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! அரசியல் குளிர் காய்வது சரியல்ல! இதனை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும். விமர்சனம் செய்யலாம்; அப்படி விமர்சிக்கும் போது காவல் துறையின் செயல்பாட்டில் என்ன குறைபாடு என்பதைச் சுட்டிக் காட்டலாம். அதைப் புறந்தள்ளி பிரச்சிைனயை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை, தீண்டாமை – இவற்றில் பிஜேபி, சங்பரிவார்களின் பார்வை என்ன என்பது தெரியாத ஒன்றா? தாழ்த்தப்பட்ட தோழர் மீசை வைத்துள்ளார் என்பதற்காகவும், குதிரை மேல் வந்தார் என்பதற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்தார் என்பதற்காகவும் தாக்கப்படவில்லையா? ஏன் கொல்லப்பட்டதும்கூட உண்டு. குடியரசுத் தலைவரை அவமதித்தவர்கள்மீது நடவடிக்கை உண்டா? இந்தியாவின் முதல் குடிமகனும், முப்படைகளின் தலைவரும், அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகனுமான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும், ராஜஸ்தான் அஜ்மீர் – பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைவிட பெருங் குற்றம் வேறொன்று இருக்க முடியுமா? குடியரசுத் தலைவரையும், அவர் குடும்பத்தையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களின்மீது பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கும், திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் குறைந்தபட்சம் அழைப்பைக்கூட இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்ற காரணத்துக்காக அளிக்காதவர்கள் வேங்கைவயலைப் பற்றிப் பேச அருகதை உடையவர்களா? வருணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் கொள்கையைக் கொண்ட கட்சியினர் ஆட்சிதானே இந்தியாவில் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியார் நினைவு சமத்துவபுரமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றால், இந்த அரசின்தூய்மையான ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு – சமூகநீதி சமத்துவக் கொள்கை எத்தகையது என்பது வெள்ளி மலையாகும். எதையும் ஒரு சார்புக் கண்ணோட்டத்தில் காண்பது – அணுகுவது, யூகிப்பது பகுத்தறிவுக்கு அழகல்ல! எங்காவது ஒரு பேருந்து நடத்துநர் எந்தக் காரணத்துக்காகத் தாக்கப்பட்டாலும் பேருந்து நடத்துநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து போராடுவது, வழக���குரைஞர் ஒருவர் எங்காவது தாக்கப்பட்டால் (என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல்) வழக்குரைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது.. இத்தியாதி இத்தியாதி முறைகள் ஏற்கத்தக்கதுதானா? இது எங்கு கொண்டு போய் விடும் என்பதைப் பொறுப்புமிக்க தலைவர்கள் உணர்ந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் சி.பி.அய். விசாரணை தேவை என்பது வாடிக்கையான வழமையான குரலாக இருப்பது வேடிக்கையானது – வினோதமானது! மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கையற்ற தன்மை சரியானதல்ல. சாத்தான்குளம் வழக்கு சி.பி.அய்யிடம் தானே ஒப்படைக்கப்பட்டது – அதன் நிலை என்ன? எடுத்துக்காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். சாத்தான் குளத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.அய். வசம்தான் ஒப்படைக்கப்பட்டது 2020 ஜூனில் நடந்த நிகழ்வு இது. 5 ஆண்டுகள் ஓடி விட்டன. 13.12.2021 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது – மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று கேட்டதுண்டே! அதற்குப் பிறகும் நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. விசாரணை முடிவுக்கு வரவில்லை. தீர்ப்பும் கிடைக்கப் பெறவில்லை. சி.பி.அய்.யிடம் ஒப்படைத்தால் விசாரணை விரைவாக நடைபெறும் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு நேரியமுறையில் அரிய தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி விசாரணையை மிகவும் சிறப்பாகவே நேர்மையாகவே நடத்தி வருகிறது. இதனைப் பயன்படுத்தி அரசியல் செய்வது நியாயமல்ல – பொறுப்பான செயலும் அல்ல. இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருப்பது தமிழ்நாடே! இந்தியாவிலேயே ��ாதிக் கலவரம், மதக் கலவரம் இல்லாமல் அமைதிப் பூங்காவாக மணம் வீசும் மாநிலத்தை அமளிக்காடாக்க முயலும் சக்திகளை அடையாளம் காட்டும் பொறுப்பு, நாட்டு நலனில் அக்கறை கொண்ட நம் அனைவரின் கடமை என்பதை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டுகிறோம். - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை 26.1.2025
5
166
408
பொங்கல் - புத்தாக்கம் பொங்கட்டும்! உழைப்பின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழா மட்டுமல்ல; உண்மையான தமிழ்ப் புத்தாண்டு தொடக்கமும் ஆகும்! பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி தழைத்தோங்கும் தமிழர்தம் புத்தாக்கமாகவும் இவ்வாண்டு அமையட்டும்! அனைவருக்கும் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள்! கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் 13.1.2025 சென்னை
92
59
203
இஸ்ரோ புதிய தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு வாழ்த்து! இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டி, மகிழ்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையரின் பிள்ளையாகப் பிறந்த திரு.நாராயணன் அவர்கள், அரசுப் பள்ளியில் படித்து, தனது அறிவாற்றலாலும், கடும் உழைப்பினாலும் இந்தப் பெரு நிலைக்கு வந்துள்ளார்! அவரது வாழ்வை இன்றைய இளைய மாணவர்கள் ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு உயரவேண்டும் என்பதும், ‘‘தகுதி, திறமை’’ என்பது எந்த ஜாதி வகுப்பினருக்கும் ஏகபோகமானதல்ல என்பதற்கு இஸ்ரோ தலைவராக உயர்ந்துள்ள திரு.வி.நாராயணன் அவர்களது வாழ்க்கை, மற்றவர்களுக்குப் போதிக்கும் ஒரு பாடம் ஆகும்! - கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் சென்னை 9.1.2025
20
47
190
*மண்ணின் மனப்பான்மை (Soil Psychology)* 1987 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நான்கு நீதிபதிகள் பதவிக்கு – அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.சந்துருகர், நான்கு பார்ப்பனர்களை பரிந்துரை செய்திருந்தார். இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் சி.பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழ் மண்ணுக்குரிய சில விசேஷமான மனநிலைகள் உண்டு. (Soil Psychology) அந்த நோக்கத்தில் இதனை ஏற்க முடியாது. இதனைப் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எழுதிவிட்டோம்’’ என்று 12.10.1987 இல் சொன்னதை இப்போது மீண்டும் நினைவு படுத்துகிறோம்.
0
18
46
நமக்கு ‘‘ஊதியம்’’ எல்லாம் எது தெரியுமா, தோழர்களே? அறுவடை செய்து, அனுபவித்து மகிழும் கொள்கை வெற்றிகளே! அய்யா தந்த அணையாத அறிவுச் சுடரை அடுத்தத் தலைமுறைக்கும், பல நூறாண்டுகளுக்கும் தரும் பணி எமது பெரும் பணி என்றே நிலை நிறுத்தும் பணி! 2024 ஆம் ஆண்டு இறுதியில், டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், திருச்சியில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாடு மிகமிக சிறப்பான வரலாறு படைத்தது! மாநில ப.க. பொறுப்பாளர்களான அதன் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், தமிழ் பிரபாகரன், மாரி கருணாநிதி, மீனாட்சிசுந்தரம், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒத்துழைத்த திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பொறுப்பாளர்களான கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், திருச்சி மலர்மன்னன், மதிவாணன், நாகம்மையார் குழந்தைகள் இல்ல விடுதிக் காப்பாளர் தங்காத்தாள், ப.க.வின் தொண்டறக் குழுவினர்கள், டாக்டர் செந்தாமரை உள்பட கல்வி நிறுவனங்களின் பகுத்தறிவாளர்களான முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள், நன்றி! 20 மாநில பேராளர்கள் (Delegates) நம்மிடம் பேசி, மனங்குளிர்ந்து, கொள்கை மழையில் நனைந்ததைப் பெரிதும் பாராட்டி நம்மிடம் கூறினர். ‘‘பெரியாரை எங்கள் மாநிலத்தில் மேலும் பரப்பிடுவோம்’’ என்பதை நெகிழ்ந்து கூறி, மகிழ்ந்தனர். ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினை, இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நீட்சிக்காக கண்களை இமை காக்கும் பணி – மற்றவர்களுக்காக அல்ல! நம் கொள்கை லட்சியம் என்றைக்கும் மகுடம் தரித்து, ‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’ என்று மனித குலத்துக்குப் பறைசாற்றுவதே! அப்பணி – தொடர் பணி நமக்கு! தொய்வின்றி, அலுப்பு சலிப்பின்றிச் செய்து, அறிவு ஆசானின் கொள்கை வெற்றியைப் பறைசாற்றி, நாளும் ஓய்தல் இன்றி, ஓர் அணியில் நின்று, உட்பகை நுழையாத ‘கொள்கை லட்சிய வாழ்வே எம் வாழ்வு’ என்று காட்டிட, புதியதோர் சூளுரை எடுத்தும், உலகம் பெரியார் மயமாக உழைப்போம்! ‘‘பெரியார் உலக மயம் உலகம் பெரியார் மயம்’’ என்பதை மூச்சுச் சொல்லாக்கி, பேச்சு நடைமுறையாக்கி, வீச்சுச் செயல்முறையாக்கி செய்து முடிக்க, புத்தாண்டில் உறுதியேற்போம் – உழைத்து நிரூபிப்போம்! வாரீர்! வாரீர்!! வாரீர்!! நன்றி! நன்றி!! நன்றி!!! கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் சென்னை 1.1.2025 (2/2)
0
5
16
#2025 புத்தாண்டு வாழ்த்து! சமூகநீதி வளரும் புத்தாண்டாகப் பொலியட்டும்! நகரும் (2024) ஆண்டு சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த ஆண்டு – இயற்கைச் சீற்றங்கள் உள்பட! பிறக்கும் புத்தாண்டு (2025) ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி வளரும் புத்தாண்டாக, வலிவும், பொலிவும் ஆன வாழ்க்கை – சுயமரியாதைப் பகுத்தறிவு வாழ்வாகப் பொலியட்டும்! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை 31.12.2024
24
38
79
வர்ணத்துக்காக வாதாடிய விவேகானந்தர் விவேகானந்தர் ஜாதிக்கு - வர்ண தர்மத்திற்காக வாதாடிய விசித்திரமானவர். இதற்கு ஆதாரம் மனோன்மணியம் சுந்தரனார், வீட்டிற்கு அழைத்துக் கொடுத்த விருந்தின்போது, விவே கானந்தர் நடந்துகொண்ட வர்ண உணர்ச்சி வெளிப்பாடு - அவரது உரைகளின் முழுத் தொகுப்பு, அவர் ஜாதி முறையை நியாயப்படுத்தியதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள். அதற்கு சரியான மாற்று மருந்தாகத்தான் வள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைத்து, செயலை விடையாகத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த வினைத் திட்பத்தை மேலும் சிறப்புடன் வெளிச்சம் காட்டி, ‘பேரறிவு ஒளியின் திருவாக நமது முதலமைச்சர் விழா மூலம் ஒரு புத்தாக்கத்தைச் செய்து, புவியோருக்குப் புரிய வைத்திருக்கிறார். புதிய உலகத்தை நோக்கிய புத்தொளி! தலைவிதியால் தாழ்ந்த மூடநம்பிக்கையாளர்களின் முதுகெலும்பை உடைக்கும் வள்ளுவரிடம் அறிவு ஏவுகணைகளுக்குப் பஞ்சமா? ‘‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' என்பது போன்ற வாழ்வில் உழைப்பின்மூலம் உயர வைக்கும் - தலையெழுத்து நம்பிக்கையை தகர்த்தெறியும் அறிவு ஒளி - இப்படியெல்லாம் எழுதிக் கொண்டே போகலாம். இதனை இப்போது திராவிடத்தின் தத்துவம் தான் என உலக மக்களுக்கு எடுத்துக் கூறி, இவ்விழா கலங்கரை வெளிச்சமாகட்டும்! ‘திராவிடம்' எவரையும் பிரிப்பதல்ல; எல்லோரையும் இணைப்பது'' என்பதே – இணைக்கும் பாலம் - தத்துவ ரீதியாகவும்! நமது முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசின் பண்பாட்டுப் பாதுகாப்புக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! புது உலகத்தை நோக்கிய பயணத்திற்கான புத்தொளி இது! கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் 31.12.2024 சென்னை
0
5
10