![வ.ரேணுகாதேவி Renu Profile](https://pbs.twimg.com/profile_images/1786778796294656000/tDVzdokW_x96.png)
வ.ரேணுகாதேவி Renu
@Renu586134
Followers
17
Following
319
Statuses
43
Joined May 2024
தோழர் @kondalthil24091 அவர்களின் முகநூல் பதிவிலிருந்து இவர்களோடு தான் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரியாரை விட பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் தான் சீமான் வளருகிறார் என்று மதிமாறன் உள்ளிட்ட தீடீர் திமுக பற்றாளர்களும், போராட்டம் போலிஸ் என்றாலே பயந்து நடுங்கும் பேஸ்புக் புரட்சியாளர்களான 2.0கும்பலும் சொல்லிக்கொண்டிருக்கிறது. இவர்கள் ஒன்றை வசதியாக மறைக்கிறார்கள். இன்று சீமான் இவ்வளவு அயோக்கியத்தனங்களையும் அக்கிரமங்களையும் செய்வதற்காக விதைபோட்டதே திமுகதான். திமுக ஈழத்திற்கு செய்த துரோகத்தில் விளைந்த விச விதைதான் இந்த சீமான். அதனால் தான் ஈழம், பிரபாகரன் என்ற பேச்சு இருக்கும்வரை திமுகவுக்கு எரிச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் அதனை ஒழித்துகட்டவே பிரபாகரன் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்ற கேள்வியை லாஜிக்காக கேட்பதுபோல இவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் நோக்கம் சீமானை தாண்டி பிரபாகரன், ஈழம் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான். சீமானின் அயோக்கியத்தனங்களை முன்னிறுத்தி திமுகவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கறையை கழுவிகொள்ளலாமென்று இதுபோன்ற பொருத்தமற்ற பேச்சுக்களை சமுக வலைதளங்களில் எழுதுகிறார்கள். ஈழம் தமிழகம் இரண்டும் வேறு வேறு தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஈழத்தை அழித்ததிலும் தமிழ்நாட்டை அழிக்க நினைப்பதும் ஒன்றே ஒன்று தான் அது இந்திய பார்ப்பனியம். ஆக இரண்டுக்கும் எதிரி ஒன்றுதான் எனும் அடிப்படையில் பொது எதிரியை வீழ்த்த நாம் பாதிக்கப்பட்டவர்களை காட்டி சொல்கிறோம். அதுவும் கூடுதாக பாதிக்கப்பட்டவர்கள் சொந்த தமிழினம் எனும்போது அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இன்னும் நெருக்கமும் நேசமும் இருக்கத்தான் செய்யும். சரி, சீமான் பெரியாரை இவ்வளவு கொச்சைப்படுத்தி பேசுகிறாரே அவரை ஏன் திமுக இதுவரை கண்டும் காணாமலும் இருக்கிறது என்பதற்கு மதிமாறனோ 2.0வும் ஏதாவது பதில் சொல்லமுடியுமா? இவ்வளவு ஏன், இன்று சீமானின் பெரியார் எதிர்ப்பு அரசியலை அம்பலப்படுத்த ஈரோடு இடைத்தேர்தலில் மதிமாறன் உள்ளிட்ட கும்பல்கள் களமிறங்க தயாரா? எதுவும் செய்யமாட்டார்கள் ஆனால் இவர்களின் சொந்த பகைக்கு பக்கம் பக்கமாக கட்டுரை எழுதவேண்டியது. ஒன்றை சீமானும் சரி, மதிகெட்டமாறன்களும் சரி, சொகுசு புண்ணாக்குள் 2.0வும் சரி புரிந்துகொள்ள வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை முன்னிறுத்தி சீமானுக்கு எதிராக மே17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்டவர்கள் தான் களமாடுகிறோம். நீங்கள் இல்லை. அன்று ஈழப்பிரச்சனையிலும் நாங்கள் தான் நின்றோம். இன்று சீமான் எதிர்ப்பிலும் நாங்கள் தான் நிற்கின்றோம். இந்த திரிபுவாத அரசியலை வேறு எங்கோ போய் பேசுங்கள் பலன் கிடைக்கும். பெரியார்வாதிகளிடம் செய்யவேண்டாம். சீமானை அம்பலப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களை அம்பலப்படுத்துவதும் அதைவிட முக்கியம். சீமான் பின்னாடி ஒளிந்துகொள்ளாதீர்கள்.
0
0
0