விலகாத பனிப்புகை
மெலிதான காற்றின் ஓசை
இணைபிரியாத பயணம்
விரல்கள் கோர்த்த நடை
திகட்டாத முத்தங்கள்
தீராத கொஞ்சல்கள்
தோள் சாய்ந்து உறக்கங்கள்
தாங்க முடியாத விடை கொடல்கள்
ஏனோ பொழிந்திடாத
மழை ..
விட்டு திரும்புகையில்
பொழிந்தது கண்களில்.. 💕
மெல்லிய மழையில் உன் கைகோர்த்து நடக்க துவங்கினேன்..
பயணம் முழுவதும் தொடர்ந்த
மழை நனைத்து சென்றது
இருவரையும்..
நனைந்த சுவடுகள் ஏதுமின்றி...
கண்களுக்குள் மழையாக..
நான் கதைகள் படிக்க ஆரம்பிச்ச நாட்கள்ல இருந்து இப்போ வரை
ம.செ.., மாருதி, அரஸ், ஜெ.. இவங்க ஓவியங்கள் உயிரோட்டமானவை ..
மறக்க முடியாதவை .. இன்னும் இருக்கு..உங்களுக்கு பிடிச்ச ஓவியர் சொல்லுங்க..😍