aanthaireporter Profile Banner
 Àanthai Répørter™ 👀🦉 Profile
 Àanthai Répørter™ 👀🦉

@aanthaireporter

Followers
862
Following
5K
Statuses
48K

Ex Editorial staff @Vikatan,,@Kumudam Spl Roll @SunTv & Raj tv.,Etc - @AANTHAIREPORTER ;Regd of Newspaper for India No. TNTAM/2012/45305 (Now Tamil Multimedia )

Chennai., Tamilnadu
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
2 years
வாழு..வாழவிடு
0
0
4
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
நம்ம ஆந்தை ரிப்போர்ட்டர் யூ ட்யூப் சேனல் டெய்லி அப்டேட் ஆகிறது.. சப்ஸ்கிரைப், கமெண்ட் எல்லாம் பண்ணினால் மகிழ்வோம்🙏
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉 திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் நேற்று துவங்கினர்.
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉*சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம்.* பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை. டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉சைதாப்பேட்டை ஜோன்ஸ்சாலை பவளவண்ணன் சுரங்கப்பாதையில் தினசரி சாக்கடையில் நீந்தி செல்லும் வாகனங்கள்
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉கோவையில் 3 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோல்ட்வின்ஸ் முதல் லீ மெரிடியன் ஹோட்டல் வரை இப்பாலம் அமையவுள்ளது. மேல் தளத்தில் மெட்ரோ ரயிலும், கீழ் தளத்தில் வாகன போக்குவரத்தும் செல்ல ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
Tweet media one
0
0
1
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉மதுரை மாட்டுத்தாவணியில் நீதிமன்ற உத்தரவுப்படி நக்கீரர் ஆர்ச் இடிக்கப்பட்டபோது பொக்லைன் ஊழியர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் மீது கோ.புதூர் பகுத�� காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தேச பாதுகாப்பு கருதி சீனாவின் 267 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், தடை செய்யப்பட்ட சீனாவின் 36 செயலிகளை clone version மூலம் செயலிகளின் வடிவமைப்பாளர்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. மீதம் உள்ள 70 பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் ஹமாஸ் அமைப்பு விடுவிக்காவிட்டால், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகிவிடும்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நென்யாகு
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் பொய் சொல்கிறார். தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க சமக்ர சிக்‌ஷா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்த நிலையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் & டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே சென்றது?: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி, வனத்துறையுடன் ச��ர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் தனது சனாதன தர்ம யாத்திரையின் ஒரு பகுதியாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கும், கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கும் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா முழுவதும் இசட் வகை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆயுதமேந்திய நிலையான காவலர்கள் உட்பட மொத்தம் 33 பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.பிப்ரவரி 19ம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும்
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலான்டி என்ற ஊரில் கோவில் திருவிழாவின்போது இரண்டு யானைகள் மிரண்டு ஓடி உள்ளது. இதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
8 hours
🦉மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுத்தியாச்ச���
Tweet media one
0
0
0
@aanthaireporter
 Àanthai Répørter™ 👀🦉
11 hours
0
0
0