![ஒளிக்கீற்று Profile](https://pbs.twimg.com/profile_images/1736300525019144192/DflPory3_x96.jpg)
ஒளிக்கீற்று
@Oureelam
Followers
2K
Following
129
Statuses
1K
விழி மூடியவர்கள் விழியாக..
தமிழீழம்
Joined February 2023
பெரும் ஊடகச் சமராடிய நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி நினைவு சுமந்து.. ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும், நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய ��லந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள் எம் தேசத்தின் ஊடகக் குரல்கள் பலதடவை நசுககப்படடன. நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூர்த்தி என்கிற அறிய மனிதனும் இணைந்துவிட்டார். சிங்களத்தின் பேரினவாத எறிகணை வீச்சினால், சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்ட சுதந்திர சிந்தனையாளன் சத்தியமூர்த்தியின் இழப்பினை. தமிழீழத் தெரியத்தின் பேரிழப்பாகக் கருத வேண்டும். ஒரே வழித் தடத்தில் நடந்த சகபயணி சத்தியமூர்த்தியின் இழப்பினை ஈடுசெய்வது மிகக் கடினம். உள்வாங்கிக் கொண்ட சமூக அவலங்களை, எளிய தமிழில், மிகச் சுருக்கமாகவும் அதேவேளை ஆழமாகவும் வெளிப்படுத்தும் பேராற்றல் சத்தியமூர்த்திக்கு உண்டு. குறிப்பாக பேரினவாத தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படும் போது, அந்த அவலத்தை வார்த்தைகளில் விபரிக்கையில் மீர்த்தியின் மானுட நேசிப்பும், வதைக்கெதிரான போர்க் குணமும் மிகத் தெளிவாக வெளிப்படும்.  ‘மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்’ என்கிற மானுடத் தத்துவத்தையே அவர் அடிக்கடி வலியுறுத்துவார். அவலத்தை கண்டு வெகுண்டெழாத மனிதன், உயிர் வாழும் தத்துவத்தை இழக்கிறான். என்கிற உயர் கருத்தினை சத்தியமூர்த்தி கொண்டிருப்பதே. என்னை அவர்பால் ஈர்த்த முதன்மைக் காரணியாகக் கருதுகிறேன். மண் மீதான தீராத காதலும், தலைவன் மீது கொண்ட ஆழமான பற்றும், மக்கள் சக்தி மீது கொண்டே நேசிப்புமே, சத்திய மூர்த்தியின் ஊடகப் பணிக்கு உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறது. இன்று ஓர் கவிதை படித்தேன். ‘அப்பாவித் தமிழர்கள் மீது பேரினவாத இராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 50 பேர் பலியானார்கள் 500 பேர் பலியானார்கள்.’ உரம் ஏறிய வன்னி மண்ணில் விதைக்கும் இடமெல்லாம் முளைக்கும் தாயக விடுதலையை நெஞ்சில் சுமந்த உன் பணியை. நாம் தொடர்ந்து சுமப்போம். எறிகணைக்கு எழுத்தாளன் என்ன? ஏதிலிகள் என்ன? எல்லாமே ஒன்றுதான். உன் நினைவுகளை எம்மண்ணில் விதைக்கின்றோம். எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாம் விதைக்கிறோம். அது வளரும்….. விருட்சமாகும்…. அதன் சுவாசத்தில் நீ நித்தியமாய் நிலைபெற்று நிற்பாய் சத்தியமூர்த்தி. #சத்தியமூர்த்தி #நாட்டுப்பற்றாளர் #தமிழீழம்
0
6
18
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.  அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் ��வையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார் உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன். #முருகதாசன் #ஈகியர் #தமிழீழம்
0
12
42
லெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.. சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். #கெளசல்யன் #தமிழீழம்
0
3
8
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் - ஊடகஅறிக்கை. தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம். சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும் பிரித்தானிய அரசிற்கும் சிறிலங்கா அரசிற்கும் முரசறைந்து, உலகத் தமிழீழ மக்களால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கம் நோக்கி, இலண்டன் மாநகரம் பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாபெரும் கரிநாள் போராட்டம். சிறிலங்காவின் சுதந்திரநாள், தமிழர்களின் கரிநாள், நாங்கள் தமிழீழ மக்கள், ஈழத்தீவின் தொன்மைக்குடிகள், எமக்கு இலங்கையர் என்ற அடையாளத்தை திணிக்காதீர்கள், எமது தன்னாட்சி உரிமையினை பிரித்தானிய அரசும் மன்னரும் அங்கீகரிக்க வேண்டும். சிறிலங்கா அரசிடம், 1948 இல் பிரித்தானிய அரசால் ஒப்படைக்கப்பட்ட, எம் தன்னாட்சி உரிமையினை எம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, தன்னாட்சிக்கான உரிமைக்குரல் பேரணி பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் பல ஆயிரக்கணக்கான தமிழீழ மக்களின் பங்குபற்றுதலுடன் பேரெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் மட்டுமல்ல, தாயகத்திலும் உலகெங்கும்நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை போராட்டத்தில், எம் தேசவிடுதலைக்கான பாதையின் அவசியமான தருணமொன்றில், பேரெழுச்சியாக தமிழர்கள் கலந்துகொண்டு மாபெரும் தேசியக் கடமையை ஆற்றி தமது விடுதலைக்கான பேரவாவை மீண்டும் உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். அனைத்துலக இளையோர் அமைப்பு, சர்வதேச இராசதந்திர கட்டமைப்பு, அனைத்துலக மக்கள் அவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில், பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானியாவின் இலண்டன் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதுவராலயத்தின் முன், பிரித்தானிய நேரம் மதியம் 12.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான இப்பேரணியானது, மதியம் மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை சென்றடைந்திருந்தது. இப்பேரணியின் நிறைவில், பிரித்தானிய மன்னருக்கும் மற்றும் பிரித்தானிய பிரதமருக்கும் ஒருங்கிணைப்புக்குழுவால் கையளிக்கப்பட்ட மனுவின் உள்ளடக்கத்தை, அங்கு கூடியிருந்த எமது மக்களிற்கு வாசித்தளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்துலத் தொடர்பக பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.றங்கன் அவர்களின் எழுச்சி உரை இடம்பெற்றிருந்தது. நிறைவாக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால், பேரெழுச்சியுடன் இப்பேரணியில் இணைந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு தமிழீழத் தனியரசே எமக்கு வேண்டுமென்ற தாரக மந்திரத்துடன் இப்பேரணி நிறைவு செய்யப்பட்டது. அனைவரும் இலங்கையர் என்ற முழக்கத்திற்குள் தமிழனத்தை அடக்கி, சர்வதேச ரீதியில் எழும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுகளை முடக்கும் தற்போதைய சிறிலங்கா அரசின் சூழ்ச்சிகர திட்டத்தை, இத்தகைய பேரெழுச்சி மூலம் தமிழ் மக்கள் தவிடுபொடி ஆக்கியுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. ஒருமித்த மக்கள் போராட்டங்கள��, எமது தேச விடுதலையை விரைவுபடுத்தும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழிகாட்டலில், எதிர்வரும் காலங்களில் நாம் அனைவரும் ஓரணியாக நின்று தொடர்ந்து போராடுவோம். "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" #TCCUK #தமிழர்_ஒருங்கிணைப்புக்குழு
0
3
12
அதிகளவான கடற்ச்சமர்களில் பங்கு பெற்றிய மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் பகலவன்.! மன்னார் மாவட்ட தளபதி லெப் கேணல் பகலவன் 1989 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இனைந்து கொண்டு எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ் மாவட்ட தாக்குதல் படையணியிலும், சாள்ஸ் அன்ரனி படையணியிலும் பங்கு பற்றிய இவர் 1993 ம் ஆண்டு கடற்புலிகளின் படையணியிலும் இனைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் சண்டைப் படகுகளின் பிரதான ஆயுதங்களின் சூட்டாளராகவும் கடற்ச்சமர்களிலும் பங்காற்றி பின்னர் படகு கட்டளை அதிகாரியாகவும் பனியாற்றிய போது இவரின் திறமையைக் கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டார்...  கடலில் நடைபெற்ற அதிகளவான அதவாது ஏறத்தாழ 165 க்கு மேற்பட்ட கடற்ச்சமர்களிலும் ஆழ்கடல் விநியோகத்திலும் பங்கு பெற்றிய பெருமை உண்டு... சமாதான காலத்தில் யாழ் வடமராட்சி பகுதியில் லெப் கேணல் அமுதாப் அண்ணா அவர்களோடு வந்து கடமையாற்றியவர்...அமுதாப் அண்ணாவும் பகலன் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கூடுதலாக செல்வார்கள் அப்போது நான் ரெக்கார்டிங் சென்றார் கடையில் வேலை செய்த போது என்னைத் தேடி வருவார்கள் ஒவ்வொரு தினங்களுக்கும் ஒலி பெருக்கிகள் எடுத்து கொடுப்பது அப்படி பல உதவிகள் செய்தேன் அவருக்கு வன்னிக்கு செல்வதற்கு முதல் நாள் நம்மிடம் வந்து கதைத்து விட்டு கஸ்பர் துனியில் யூ வடிவம் போல் இரண்டு பொக்கற் உள்ள சேட் எனக்கு தந்து சென்றவர் தான் பகலவன் அமுதாப் அண்ணா அவர்கள் அந்த சேட்டை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள் தான் அது புதுக்குடியிருப்பு ரெயிலர் கடையில் தயாரிக்கப்பட்டது நமது ஊரில் சில பேருக்கு தகவல் தெரியும் என் கூட இருந்தவர்களுக்கு மட்டும் தெரியும். #லெப்_கேணல்_பகலவன் #கடற்புலிகள் #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
0
34
115
தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட லெப். கேணல் விநாயகம்..! இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம். நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம். சொந்தப்பெயர்: தங்கவேல�� சுதரதன். சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்) வீரச்சாவுத்திகதி: 04.02.2009 வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில். விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்ப���க்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன. #லெப்_கேணல்_விநாயகம் #கடற்புலிகள்
0
24
88
தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம் - ஈழத்தமிழர்பேரவை ஐக்கிய இராட்சியம் விடுத்துள்ள அறிக்கை . பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் 04.02.2025 அன்று நடைபெறும் மாபெரும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் ஊடக விடுத்துள்ளது குறித்த அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. #தன்னாட்சிக்கான_உரிமைக்குரல்
0
0
1