![K.NavasKani MP Profile](https://pbs.twimg.com/profile_images/1514969127558914057/WErGIQBL_x96.jpg)
K.NavasKani MP
@KNavaskani
Followers
9K
Following
479
Statuses
2K
தலைவர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம். நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதபுரம். மாநிலத் துணைத் தலைவர் -IUML.
Ramanathapuram, India
Joined May 2019
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டும் வரும் நிகழ்வு தொடர்கதையாகி உள்ள நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றிய அரசு இவ்விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டுத் தர வலியுறுத்தியும், நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரவும் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டோம்.
11
12
44
#நாடாளுமன்றத்தில்_நவாஸ்கனி_MP, இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரிவான புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். இன்று நாடாளுமன்ற மக்களவையில் விதி 377 ன் கீழ் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி வழங்கிய உரை. -- என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வறட்சியான பகுதி, வற்றாத நீர்நிலைகள் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த நீர் நிலைகளும் இல்லாத பகுதி, எனவே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், மகாத்மா காந���தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் எனது ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வைகை ஆற்று தண்ணீர் அனைத்து கண்மாய்களையும் சென்றடைவதற்கும், அதன் மூலம் விவசாயம் செழிப்பதற்கும் சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காற்றாற்று வெள்ளம் வரக்கூடிய வரத்து கால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும், நகரங்களிலும், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
26
7
26
RT @mkstalin: On this #WorldWetlandsDay, I am extremely delighted to share the designation of two more Ramsar sites, Sakkarakottai and Ther…
0
588
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேசத் தரத்திலான Water Sports Academy -யை, 42.9 கோடி ரூபாய் மதிப்பில் 6 ஏக்கர் இடப் பரப்பில் அமைக்க கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டிய நிலையில், அந்த இடத்தில் இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வில் மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான திரு காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருடன் பங்கேற்றேன். இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. முருகேசன், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். — கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம். மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
7
10
42
இன்று சென்னை புதுக்கல்லூரியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட ‘தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு’ – Organization Of Muslim Educational Institutions & Associations Of Tamil Nadu (OMEIAT)-ன் பொன் விழா ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன். இந்நிகழ்வில் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் திரு கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர் ப அப்துல் சமது, OMEIAT அமைப்பின் அங்கத்தினர்கள், புதுக்கல்லூரி MEASI கல்வி நிறுவன அங்கத்தினர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
1
9
47
தூத்துக்குடி, மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிறைவு விழா சமய நல்லிணக்க விழா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினேன். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ கீதாஜீவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் அங்கத்தினர்கள், ஜமாத் நிர்வாகிகள், மாணவகள் பங்கேற்றனர்.
2
13
34
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரமக்குடி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தோம்., இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு முருகேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன், திமுக பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திரு வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது, தமிழ் புலிகள் கட்சி செயலாளர் திரு ராஜா உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
1
9
40
வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த தீர்மானங்களை நிராகரித்து, சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதம். பாஜக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத செயல் கடும் கண்டனத்துக்குரியது. வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை ஆய்வு செய்ய தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று குரல் எழுப்பிய நிலையில், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டு, அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்த தீர்மானங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்து, சட்ட திருத்தத்திற்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இப்படி பாஜக ஆதரவு உறுப்பினர்கள் பரிந்துரைகளை மட்டும் கருத்தில் கொள்வதற்கு ஏன் இந்த கூட்டு குழு என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வண்ணம் வக்ஃபு திருத்த மசோதாவை கொண்டு வந்த பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்தால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பியது, ஆனால் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் ஜனநாயகத்தை மீறி தனது சர்வாதிகார போக்கை காட்டி இருக்கிறது பாஜக அரசு. பாஜகவின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தொடர்வோம். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம், மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
12
20
50
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது இராமநாதபுரத்தை சார்ந்த எஸ் ஏ அமீர் அம்சா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. திரு எஸ் ஏ அமீர் அம்சா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும் அவசர உறுதி சேவை உள்ளிட்ட அவசர காலத்திற்கான அனைத்து சேவைகளையும், உதவிகளையும் முன்நின்று சேவை உணர்வோடு செய்து கொண்டிருப்பவர். அன்னாரது சேவைகளை ஊக்குவிக்கும் வண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஏற்பாட்டில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதினை பெற்றிருக்கும் திரு எஸ் ஏ அமீர் அம்சா அவர்களின் மகத்தான சேவைகள் மென்மேலும் தொடர்ந்திட நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர். தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம், மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
0
11
32
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சார்ந்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி கடிதம். --- இலங்கை கடற்படையினரால் (25-01-2025) கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சார்ந்த 34 மீனவர்களையும் 3 மீன்பிடி விசைபடகுகளையும் ,(12-01-2025) கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சார்ந்த 8 மீனவர்களையும் 2 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், இதுவரை கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது நாட்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கடிதம் எழுதியுள்ளார். நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர். தற்போது 25-01-2025 அன்று இராமேஸ்வரத்தை சார்ந்த 34 மீனவர்களையும் 3 மீன்பிடி படகுகளையும், 12-01-2025 அன்று இராமேஸ்வரத்தை சார்ந்த 8 மீனவர்களையும் 2 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
4
10
25
76வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தேன். வேற்றுமையில் ஒற்றுமை எனும் உன்னத தத்துவத்தின் கீழ் பன்முகத்தன்மையோடும், நல்லிணக்கத்தோடும் உயர்ந்து நிற்கும் நம் நாட்டின் இறையாண்மையை உயர்த்தி பிடிப்போம். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். இந்நிகழ்வில் மாண்புமிகு வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட வக்ஃபு வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். -- கே நவாஸ்கனி தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
5
7
28
மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், தர்கா நிர்வாகத்தினர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் சுமூகமான முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கடிதம். -- மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே நவாஸ்கனி எம்பி கடிதம் எழுதியுள்ளார். -- இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன். அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண். எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
15
14
42
வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோத செயல்முறைகள் கடும் கண்டனத்துக்குரியது. தொடர்ந்து அனைத்து விவகாரங்களிலும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் பாஜக அரசு, வக்ஃபு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலும் ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது. இன்று நடைபெற்ற வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா,கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முஹம்மது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகிய 10 எதிர் கருத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு வக்ஃபு திருத்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் பயணம் செய்து பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை பெற்றுள்ளது. இத்தகைய கருத்துக்களை ஆய்வு செய்ய தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பிய நிலையில், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து இந்த மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்ற துடிக்கும் பாஜகவின் செயல் அப்பட்டமான ஜனநாயக விரோதம். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வண்ணம் வக்ஃபு திருத்த மசோதாவை கொண்டு வந்த பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்தால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பியது, ஆனால் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் ஜனநாயகத்தை மீறி தனது சர்வாதிகார போக்கை செயல்படுத்த துடிக்கும் பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல் கடும் கண்டனத்துக்குரியது. பாஜகவின் ஜனநாயக விரோத போக்கிற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம், மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
12
17
34
நேற்று வரை பாஜகவின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் நானே அங்கு சென்று, அங்கு மலையில் அமர்ந்து பிரியாணி உண்டதாக அறிக்கையாகவும் வெளியிட்டார், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தெரிவித்தார். ஆனால் இன்று நான் மலைக்கு மேலேயே செல்லவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்த பின்பு, என்னுடன் வந்த ஆதரவாளர்கள் உண்டனர் என மாற்றி அறிக்கை விட்டிருக்கிறார். அண்ணாமலை அவர்கள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் இத்தகைய செயல்பாடுகளையும், இதனை வைத்து வெறுப்பு அரசியல் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
144
434
1K