Idam_valam Profile Banner
Idam valam Profile
Idam valam

@Idam_valam

Followers
3K
Following
252
Statuses
20K

Welcome to IDAM VALAM, where we discuss everything from society and economy to history and politics. Join us and enrich your understanding.

Chennai, India
Joined April 2023
Don't wanna be here? Send us removal request.
@Idam_valam
Idam valam
4 hours
சென்னையில் பயணிகளின் வசதிக்காக AC வசதியுடன் கூடிய மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்தப் புறநகர் ரயில் பெட்டிகளின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து, அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. #Chennai
Tweet media one
Tweet media two
0
0
0
@Idam_valam
Idam valam
5 hours
இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாகிவிட்டதாக சொல்லும் உச்சநீதிமன்றம்; வெளியே விற்பனை செய்யப்படும் ரேஷன் அரிசி; அம்மா உணவகத்தின் தரத்தை குறைத்த திமுக அரசு! #Freebies #SupremeCourt #DMK #AIADMK #Jayalalithaa #MKStalin #AmmaUnavagam Link:
Tweet media one
0
0
0
@Idam_valam
Idam valam
18 hours
RT @sansbarrier: மானங்கெட்ட Sun news ன் ஈனங்கெட்ட வேலை! | இந்த பொழைப்புக்கு.. | Kishore K... via @YouTube
0
4
0
@Idam_valam
Idam valam
23 hours
விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய வட்டாட்சியர், 4 வருவாய் அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர், இரு வேளாண் அலுவலர்கள் உட்பட 7 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். #Virudhunagar
Tweet media one
0
2
6
@Idam_valam
Idam valam
23 hours
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், அமைச்சர் ஆவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என கேட்டு தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #SenthilBalaji
Tweet media one
1
2
24
@Idam_valam
Idam valam
23 hours
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNGovt
Tweet media one
0
0
1
@Idam_valam
Idam valam
23 hours
செங்கோட்டை நகராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல், பாதியில் வெளியேறிய நகராட்சி மன்றத் தலைவரிடம் அதிமுக & பாஜக உறுப்பினர்கள் வாக்குவாதம்; பதிலளிக்க முடியாமல் கொச்சையாக விமர்சித்தபடி காரில் பறந்த நகராட்சி மன்றத் தலைவர் #Tenkasi #AIADMK #DMK #BJP
1
17
66
@Idam_valam
Idam valam
1 day
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளை வென்று, தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முயற்சியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. #INDvENG #INDvsENG
Tweet media one
0
0
0
@Idam_valam
Idam valam
1 day
அமித்ஷா உதவியோடு சிவசேனாவை பிளவுபடுத்தியது ஷிண்டே தான். அவரை பாராட்டுவது பாஜக தலைவரை கௌரவிப்பதற்கு சமம். பவார் ஒரு மூத்த அரசியல்வாதி. அவரை மதிக்கிறோம். ஆனால் ஷிண்டேவை வாழ்த்துவது மராட்டியர்களின் மனதை புண்படுத்துவது போல உள்ளது: சிவசேனா UBT மூத்த தலைவர் சஞ்சய் ராவத் #ShivsenaUBT
Tweet media one
0
0
0
@Idam_valam
Idam valam
1 day
லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயிலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்ரியல் ஃபோர்சித் என்கிற 26 வயதான பெண்ணை மதுபோதையில் இருந்ந ஒருவர் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #London #Indians
Tweet media one
0
0
0
@Idam_valam
Idam valam
1 day
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து வரும் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் அறிவிப்பு #AIADMK
Tweet media one
3
11
73
@Idam_valam
Idam valam
1 day
தமிழகத்தில் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 38 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. IAS அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் #PMK
Tweet media one
0
1
0
@Idam_valam
Idam valam
1 day
திருவாரூரில் ஆதியன் பழங்குடி சான்றிதழ் தரக்கோரி 17வது நாளாக 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #Tiruvarur #TNGovt
Tweet media one
0
0
1
@Idam_valam
Idam valam
1 day
தமிழகத்தில் சமீபமாக  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான குற்றங்களை தடுக்க DGP சங்கர் ஜிவால், ADGP ஜெயராம் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசித்துள்ளார். #TNGovt #Chennai
Tweet media one
0
0
2
@Idam_valam
Idam valam
1 day
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையத்திற்கு 2 அதிகாரங்களே உள்ளன. பிரிவு 15-ன் படி கட்சி பிளவுகள் பற்றி ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம். 29A பிரிவின் படி கட்சியை பதிவு செய்யலாம். உட்கட்சி விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் #AIADMK
Tweet media one
0
4
38
@Idam_valam
Idam valam
1 day
நான் ஆலோசனை எல்லாம் நடத்தவில்லை. அந்தியூர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பிதழ் தர வந்துள்ளனர். தினமும் என்னை சந்திக்க வீட்டுக்கு 100, 200 பேர் வருவது வழக்கம்தான். விவசாயிகள் விழா குறித்து பேசியது அன்றே முடிந்துவிட்டது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் #DMK
Tweet media one
0
14
102
@Idam_valam
Idam valam
1 day
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் உடன் பொதுக்கூட்ட ஏற்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். #Sengottaiyan #AIADMK
Tweet media one
1
18
163
@Idam_valam
Idam valam
1 day
அதிமுக உடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. தேர்தல் வரும்போது, வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் #DMDK
Tweet media one
1
22
174
@Idam_valam
Idam valam
1 day
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் குறித்து ஆராயவும், சின்னம் ஒதுக்கீடு சட்டப்படி விசாரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #AIADMK
Tweet media one
0
0
2
@Idam_valam
Idam valam
2 days
RT @sansbarrier: டேய் முட்ட போண்டா TTV.... காட்டிக்கொடுத்த காவாலி பயலே | Kishore K swamy ... via @YouTube
0
3
0