![Aadhav Arjuna Profile](https://pbs.twimg.com/profile_images/1631591709846179840/1cDTOsyz_x96.jpg)
Aadhav Arjuna
@AadhavArjuna
Followers
45K
Following
9
Statuses
391
Election Campaign Management- General Secretary @tvkvijayhq | Founder - @thevocofficial | President - @BFI_basketball | President - @TNBAhub | GS - @TNOA_Offi
TamilNadu
Joined November 2022
இந்தியாவில் தேசியக் கட்சி ஒற்றை ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றிகண்டவர். இளைஞர் படையின் துணையோடு முதன்முதலாக மாநிலக் கட்சித் தலைமையிலான ஆட்சியை உருவாக்கியவர். மாநில சுயாட்சியின் நாயகர். இருமொழிக் கொள்கையின் சிற்பி. பண்ணையார் அரசியலை ஒழித்து, சாமானிய அரசியலை நிறுவிய மக்கள் தலைவர். இன்றுவரை, தமிழ்நாடு அரசியலின் திசைவழியாக இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றுவோம். 1967-ம் ஆண்டு அண்ணா அடைந்த மகத்தான வெற்றி பண்ணையார் ஆதிக்கத்தைத் தகர்த்த அந்த வரலாற்று நிகழ்வைப் போல, இன்றைய பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை நம்மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2026-ம் ஆண்டு சாமானிய-எளிய மக்களுக்கான ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் அளித்து புதிய வரலாற்றைப் படைக்கும். அண்ணாவின் அறிவுரையான “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி” என்கிற வழியில், நம் தலைவர் சுட்டிக்காட்டியது போல ‘மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்து’ ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்கான சூழல் இப்போது நமக்கு அமைந்துள்ளது. அண்ணாவின் நினைவுநாளில், அந்த சூளுரையையே நம் வெற்றிப் பயணத்திற்கான உறுதியாக ஏற்றுப் பயணிப்போம்!
6
711
3K
தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது. மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
11
2K
8K
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகத்தில்' மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோர்த்துள்ளேன். தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மானுட மாண்பு, 'நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அரசியலமைப்பு நெறி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூகநீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன். மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
43
4K
15K
இந்தியாவின் அடையாளம் மதச்சார்பின்மையாகவும், இந்தியர்களின் நல்வாழ்வு மத நல்லிணக்கத்தோடும் இருக்க வேண்டும் என்று தனது இறுதி மூச்சுவரை போராடிய காந்தியார், அதற்கு எதிரான ஆதிக்க அரசியலால் படுகொலை செய்யப்பட்டார். 'வாழ்வின் உன்னத பாதையில் சக மனிதருக்கும் வழிவிட்டு நடக்க வேண்டும்' என்ற சகோதரத்துவ மாண்பைப் போதித்தார். 'எனது வாழ்வே எனது செய்தி' என்று குறிப்பிட்டார். அவரது பயணங்களும் மரணமும் நமக்குச் சொல்வது மனிதத்தின் பக்கம் நில்லுங்கள். வலிமையான மக்கள் பிரச்சாரத்தின் மூலம் மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குங்கள். காந்தியார் நினைவு தினம் அதற்கான உத்வேக தினம்.
3
173
2K
மாபெரும் வரலாற்றுப் போராட்டங்களின் வெற்றியால் சுதந்திரமடைந்தது இந்தியா. மேலும் வரலாற்றுச் சிறப்பாக, 'சமத்துவத்திற்கான உரிமை', 'சுதந்திரத்திற்கான உரிமை', 'சக வாழ்வு மற்றும் சுய விருப்பத்திற்கான உரிமை' ஆகிய பொன்விதிகளோடு உருவான அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் குடியரசாக மலர்ந்தது. குடியரசின் பெருமிதத்தைக் கொண்டாடுவோம். 'எல்லோருக்கும் எல்லாம்' என்று அரசியலமைப்பு சட்டம் கூறும் அரசியலை வெல்வோம்.
1
17
181
சமூகநீதியா?.. சாதி நீதியா?.. வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழகக் காவல்துறை. தலித் மக்களே தங்கள் குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து அதை அவர்களே அருந்தியிருக்கிறார்கள் என்ற 'அறியக் கண்டுபிடிப்பை' இவ்வளவு நாள் கழித்து துப்பறிந்து கண்டறிந்துள்ளது காவல்துறை. தலித் மக்கள் மீதான அதிகாரத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை காலம் நீளும்.. தலித் மக்களுக்கு எதிரான இந்த விசாரணை அமைப்புகளின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், தற்போது குற்றவாளிகள் என்று காவல்துறை சித்தரித்துள்ள முரளி ராஜா, முத்துகிருஷ்ணன்,சுதர்சன் ஆகிய மூவரையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தேன். மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்? இதை எவ்வாறு மனம் வந்து காவல்துறையால் குறிப்பிட முடிகிறது. புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தின் ஆணிவேராகச் சாதி ஆதிக்கம் இருப்பதையும், காவல்துறை இந்த விவகாரத்தை அப்போதே திசை திருப்பும் வேலையில் இறங்கியதையும் தெரிந்தே, மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் அவர்கள் தனியாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த மூன்று தோழர்களும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகார வர்க்கத்தை நோக்கி எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த வழக்கு தலித் மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. வலியவர்களின் குரல் அம்பலத்திற்கு வராது என்பது போல இந்த எளிய மக்களின் குரலை அதிகாரம் என்கிற கயிற்றைக் கொண்டு நெறிக்கும் வேலையை காவல்துறை மேற்கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்! பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். அதிகாரவர்கத்திற்கு எதிராக அந்த அதிகாரமற்றவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியே எனது இப்போதைய தலையாய பணியாகக் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே என்னுடைய பயணம் இருக்கும். அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை.
11
579
2K
தமிழர் மீது திணிக்கப்பட்ட இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீரமாகக் களமாடி தம் உயிரையும் கொடுத்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் 'மொழிப்போர் தியாகிகள் தினம்' இன்று. 'மொழி ஆதிக்கம் எந்தவிதத்தில், எந்தப் பெயரில் வந்தாலும் அதை ஏற்கமாட்டோம்' என்று நமக்குக் கற்றுக்கொடுத்துச் சென்ற மொழிப்போர் தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்.
2
45
347
வங்காளத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து, கல்கத்தாவில் தத்துவவியலும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் அறிவியலும் பயின்று, குடிமைப் பணி (ICS) தேர்வில் தேர்ச்சிபெற்றவர் நாட்டின் சுதந்திரத்திற்காக அப்பதவியைத் துறந்தார். விடுதலைத் தாகம் கொண்டு தேசிய இயக்க போராட்டத்தில் இணைந்து முன்னணியில் பங்காற்றியவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் அளவிற்கு உயர்ந்தார். பின்னாளில் காங்கிரஸிலிருந்து பிரிந்து 'ஃபார்வர்ட் ப்ளாக்' என்ற இயக்கத்தையும், 'இந்தியத் தேசிய இராணுவம்' என்ற படையையும் கட்டமைத்தாலும் ஒன்றுபட்ட தேச விடுதலை, தேச தலைவர்கள் மீது என்றும் மதிப்பு வைத்திருந்தார். அதனாலேயே, தனது இராணுவப் படைப் பிரிவுகளுக்கு காந்தியார், நேரு, மௌலானா ஆசாத், ஜான்சி இராணி இலட்சுமிபாய் (மகளிர் படை) ஆகியோர் ��ெயரை வைத்தார். காலனிய அடக்குமுறையிலிருந்து தேச விடுதலை, சமத்துவ சமூகம், சோசலிச அரசியல் என்ற இலட்சிய பயணத்தில் சிறு சமரசத்திற்கும் இடமின்றி ஆதிக்க எதிர்ப்பு வீரராகத் திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அதனாலேயே, தேசம் அவரை 'மரியாதைக்குரிய தலைவர்' (நேதாஜி) என்று அழைக்கிறது. வீரமும் செறிவும் நிறைந்த நேதாஜியின் போராட்ட வலிமையை அவர் பிறந்தநாளான இன்று போற்றி பின்தொடர்வோம்.
2
28
295
வறுமையும் ஏழ்மையும் சமூகத்திலிருந்து ஒழிய வாழ்நாள் முழுக்க போராடிய மகத்தான தலைவர். சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி மேம்படுத்தியதன் மூலம் ஏழை மாணவர்களின் பசிப்பிணியைப் போக்கிய புகழுக்குரியவர். அரசுப் பள்ளியில் படித்த நான் அவரின் சத்துணவுத் திட்டத்தால் பயனடைந்த நெகிழ்ச்சியை இந்நேரத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன். அரசியல் பணம் ஈட்டுவதற்கல்ல, பாமரர்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களையும் நிர்வாகங்களையும் மேற்கொள்வதற்கானது என்று பாடம் புகட்டியவர். பேரறிஞர் அண்ணாவை தன் ஒரே தலைவராகப் பறைசாற்றி, அவர் இலட்சியப் பாதையில் பயணித்தவர். போற்றுதலுக்குரிய மக்கள் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் செயற்திட்டங்களையும், புகழையும் இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டும் என்று கூறி அவரது பிறந்தநாளை நினைவுகூருகிறேன்.
4
185
1K
அறம், அரசியல், தனிமனித மாண்புகளை உலகிற்குப் போதித்த தமிழ் நிலத்தின் மூத்தோன் வள்ளுவரின் புகழைப் போற்றும் 'திருவள்ளுவர் நாள்' தமிழரின் அறிவுத்திருநாளாகும். தமிழ்ப் பண்பாட்டு வாழ்வியலைக் கொண்டாடும் இந்நாளில் நமக்கெதிராக நடந்துவரும் மொழி, கலாச்சார, அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர் நல்வாழ்வையும் அரசியல் சுயநிர்ணயத்தையும் வென்றெடுப்போம். சமத்துவ சமுதாயத்தை உறுதிப்படுத்துவோம்.
1
24
229
Best wishes to the winners of the special performance titles at the 74th Senior National Basketball Championship. In a first-of-its-kind initiative, the winning teams will receive cash prizes totalling an incredible ₹20 Lakhs. Additionally, the MVP title winners will each be awarded a car, and the Best Three-Point Shooters will receive a cash prize of ₹50,000 each. The Basketball Federation of India is proud to honor such outstanding talent and celebrate these remarkable achievements in Indian Basketball.
1
11
99
A special thanks to all the participating teams for showcasing extraordinary talent and sportsmanship. I am deeply grateful to the support staff, officials, and everyone who contributed to making this tournament a grand success. Together, we continue to raise the bar for Indian Basketball! (2/2)
0
4
22